×
 

பலுசிஸ்தான் பாம் அட்டாக்கில் இந்தியாவுக்கு தொடர்பா? பொய் குற்றச்சாட்டுகளை அடித்து விடும் பாக்.,

பாகிஸ்தானின் பலூசிஸ்தானில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட 6 பேர் இறந்த விவகாரத்தில் இந்தியாவுக்குத் தொடா்பு இருப்பதாக பாகிஸ்தான் சுமத்திய குற்றச்சாட்டுகளை இந்தியா மறுத்துள்ளது.

பாகிஸ்தானில் அதிக நிலப்பரப்பு கொண்ட மாநிலமாக இருப்பது பலுசிஸ்தான். பலுாச் இன மக்கள் பெரும்பான்மையாக இருக்கின்றனர். தங்களுக்கு தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இங்கு போராளிக்குழுக்கள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. இதில் பலுச் விடுதலை ராணுவம் என்ற போராளிக்குழு முக்கியமானது. ராணுவம் போன்ற அனைத்து வசதிகளுடன் செயல்படும் இந்த அமைப்பு, பாகிஸ்தான் ராணுவம் மீதும், அரசு அமைப்புகள், நிறுவனங்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது.

சமீபத்தில் இந்த அமைப்பை சேர்ந்த போராளிகள் ரயிலை கடத்தி போலீசார், ராணுவ வீரர்களை சுட்டுக்கொன்ற சம்பவம் அரங்கேறியது. இப்போது இந்தியாவுடன் ஏற்பட்டுள்ள போர் பதட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் கவனம் செலுத்தி வரும் சூழலில், பலுச் விடுதலை ராணுவம் மீண்டும் அதிரடி தாக்குதலை நடத்தி வருகிறது. இந்தியா நடத்திய தாக்குதல்களால் பாகிஸ்தான் தத்தளித்து வரும் சூழலில் உள்நாட்டு சிக்கலையும் சமாளிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பலூசிஸ்தானில் பள்ளி வாகனம் மீது தற்கொலை படை தாக்குதல்.. கதறி, உடல் சிதறி இறந்த குழந்தைகள்..!

இந்த நிலையில் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குஸ்தாா் பகுதியில் பள்ளிப்பேருந்தில் தற்கொலைப் படையினா் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 3 குழந்தைகள் உள்பட 6 போ் கொல்லப்பட்டனா் மற்றும் 38 போ் காயமடைந்தனா்.  அவர்களை குவெட்டா என்ற இடத்தில் உள்ள மருத்துவமனைக்கு விமானத்தில் கொண்டு சென்றனர்.  காயம் அடைந்தவர்கள் நிலைமை கவலை அளிப்பதாக இருப்பதால், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத கும்பலும் பொறுப்பேற்கவில்லை.  ஆனால் பலூசிஸ்தான் விடுதலைப் படை இந்த தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.  இந்த அமைப்பை அமெரிக்கா 2019ல் பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது.

இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், அப்பாவி குழந்தைகள் மற்றும் ஆசிரியா்கள் கொல்லப்பட்டதற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தாா். இந்நிலையில், இத்தாக்குதலில் இந்தியாவுக்குத் தொடா்பிருப்பதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. 

இதற்கு மறுப்பு தெரிவித்து இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் கூறுகையில், குஸ்தாா் சம்பவத்தில் பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. பயங்கரவாதத்தின் உலகளாவிய மையம் என்ற தனது அடையாளத்தில் இருந்து உலக நாடுகளின் கவனத்தைத் திசைதிருப்ப, அனைத்து உள்நாட்டுப் பிரச்னைகளுக்கும் இந்தியாவை குற்றஞ்சாட்டுவது பாகிஸ்தானின் இயல்பாகிவிட்டது. உலக நாடுகளை ஏமாற்றும் பாகிஸ்தானின் இந்த முயற்சி தோல்வியடையும் என்றாா். 

இதையும் படிங்க: பாக்., தாக்குதலில் பலியானோர் குடும்பத்தினருக்கு அரசு வேலை.. காஷ்மீர் கவர்னர் சொன்ன குட்நியூஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share