வரி குறைப்பு..! இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையே வர்த்தக ஒப்பந்தம்…!
200 கோடி மக்களை உள்ளடக்கிய இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.
200 கோடி மக்களை உள்ளடக்கிய இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது உலக வர்த்தக வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்துள்ளது. இந்தியா-ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாட்டில் இந்த ஒப்பந்தத்தின் முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி இதனை அனைத்து ஒப்பந்தங்களின் தாய் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் இதை இரண்டு பில்லியன் மக்களை உள்ளடக்கிய சுதந்திர வர்த்தக மண்டலமாக விவரித்தார்.
இந்த ஒப்பந்தம் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகால பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. 2007-ஆம் ஆண்டு தொடங்கிய பேச்சுகள் 2013-இல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. பின்னர் 2022-இல் மீண்டும் தொடங்கப்பட்டு, 2025 அக்டோபர் மாதத்தில் இறுதிக் கட்ட பேச்சுகளுடன் முன்னேறியது. இறுதியாக ஒப்பந்தத்தின் உரை முடிவடைந்து கையெழுத்து நடைமுறைக்கு வந்தது. இது இந்தியாவின் வரலாற்றில் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தமாகவும், ஐரோப்பிய யூனியனின் சார்பிலும் மிகப் பெரிய ஒப்பந்தமாகவும் கருதப்படுகிறது.
இரு தரப்பினரும் சேர்ந்து உலகின் சுமார் 25 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தியையும், உலக வர்த்தகத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கையும் பிரதிபலிக்கின்றனர். இந்தியாவின் 140 கோடி மக்களுடன் ஐரோப்பிய யூனியனின் சுமார் 45 கோடி மக்களை இணைக்கும் இந்த ஒப்பந்தம், 200 கோடி மக்களைக் கொண்ட ஒரு பெரிய சந்தையை உருவாக்குகிறது. இதனால் இரு பக்கங்களுக்கும் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் நுகர்வோர் நலன்கள் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களில் 90 சதவீதத்திற்கும் மேலான ஐரோப்பிய பொருட்களுக்கு இந்தியாவில் சுங்க வரிகள் குறைக்கப்படுதல் அல்லது முழுமையாக நீக்கப்படுதல் அடங்கும்.
இதையும் படிங்க: நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் நாளை வேலை நிறுத்த போராட்டம்..! சேவைகள் பாதிப்பு அபாயம்..!
வாகனங்கள், ஒயின், ஆல்கஹால் பானங்கள், உணவுப் பொருட்கள், ரசாயனங்கள், விமானங்கள் போன்ற பல துறைகளில் வரிகள் கணிசமாக குறையும். ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ லூயிஸ் சாண்டோஸ் உர்சுலா வான்டெர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. உலக பொருளாதாரத்தில் 25% உள்ள இந்தியா - ஐரோப்பிய யூனியன் நாடுகளிடையே புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. பேச்சுவார்த்தை ஏற்கெனவே நிறைவடைந்த நிலையில், இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. மருத்துவ ஆக்சிஜனுக்கான வரியிலும் சலுகை கிடைக்கும் என ஒப்பந்தத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவின் கடன் உதவி..!! பட்டியல் இதோ..!! லிஸ்ட்ல டாப் எந்த நாடு தெரியுமா..??