இந்தியாவில் போராட்டம் வெடிக்கும்...! பாதுகாப்பை பலப்படுத்துங்க..!! உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை..!!
இந்தியாவில் பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும் என உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் பதற்றம் தற்போது மத்திய கிழக்கு பிராந்தியத்தை மிகுந்த அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள ஒரு உச்சகட்ட நிலையை எட்டியுள்ளது. இது வெறும் பதற்றம் அல்ல., அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தொடங்கிய பெரிய அளவிலான இராணுவத் தாக்குதல்களால் முழு அளவிலான போராக மாறியுள்ளது.
இந்தப் போரின் விளைவாக உலக அளவில் பல்வேறு தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளன. ஹார்முஸ் நீரிணைப்பை ஈரான் மூடும் அச்சுறுத்தல் எழுந்துள்ளதால் உலகப் பொருளாதாரம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இந்தியாவில் விமான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டு, நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சர்வதேச சமூகம், குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபை, இந்தத் தாக்குதல்களை கண்டித்து உடனடி போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் தற்போது இரு தரப்பும் தீவிரமடைந்து வருவதால், போர் மேலும் விரிவடையும் அபாயம் அதிகரித்துள்ளது.இந்த சூழலில் மத்திய கிழக்கு முழுவதும் அச்சம் நிலவுகிறது. இந்த நிலையில், இந்தியாவில் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் மற்றும் போராட்டங்கள் வெடிக்க கூடும் என மாநிலங்களுக்கு இந்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேல் - ஈரான் இடையே நீட்டித்து வரும் போர் பதற்றத்தால் வன்முறைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்..!! இந்திய பொருளுக்கு 126% வரியாம்..!! ஏற்றுமதியாளர்கள் ஷாக்..!!
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்க மாநிலங்களுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. வன்முறை தூண்டும் வகையில் பேசுவோர் மற்றும் பதிவிடுவோரை கண்காணிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சமூக, அரசியல் இயக்கங்களின் செயல்பாடுகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. வெளிநாட்டினர் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: INS அஞ்சதீப்..! நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் போர்க்கப்பல்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு..!!