அத்துமீறும் பாகிஸ்தான்! மீறப்படும் அமைதி ஒப்பந்தம்... இந்திய ராணுவ அதிகாரிகள் விளக்கம்!
ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பாக இந்திய ராணுவத்தினர் இன்று பிற்பகல் விளக்கம் அளிக்க உள்ளனர்.
பகல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் தகவல் நடத்தியது. பயங்கரவாதிகளை குறி வைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் தீவிரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர். ஆனால் பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர் பகுதியில் மக்கள் வாழும் பகுதிகளை குறி வைத்து அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் 15 இந்தியர்கள் கொல்லப்பட்டனர். தொடர்ந்து பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது. இந்த மோதல் போக்கை தடுக்கும் விதமாக இரு நாடுகளுக்கும் இடையே அமைதி உடன்படிக்கை எட்டப்பட்டது.
எனவே தாக்குதல்கள் அனைத்தும் நிறுத்தப்பட்ட நிலையில் அடிக்கடி காஷ்மீர் பகுதியில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக இன்று பிற்பகல் மூன்று முப்பது மணிக்கு இந்திய ராணுவத்தினர் விளக்கம் அளிக்கின்றனர். இந்தியா - பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்திற்கு பின்னரும் எல்லையில் ரூம் தாக்குதல் தொடரும் நிலையில் விளக்கம் தரப்பட உள்ளது.
இதையும் படிங்க: அமெரிக்க அதிபர் டரம்ப் தலையீடு பற்றி ஒரு வார்த்தை ஏன் பேசல.? பிரதமர் மோடிக்கு கபில்சிபல் அடுக்கடுக்காக கேள்விகள்!
இதையும் படிங்க: போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்ததா அமெரிக்கா.? மோடி சர்க்காருக்கு ஆதரவாக பேசும் சசி தரூர்!