#BREAKING: கனடாவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை... பல்கலை. வளாகத்திலேயே பயங்கரம்...!
கனடாவின் டொராண்டோ பல்கலைக்கழக வளாகத்திலேயே இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டொராண்டோ பல்கலைக்கழக ஸ்கார்பரோ வளாகத்திற்கு அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் இந்திய முனைவர் பட்ட மாணவர் 20 வயது ஷிவாங்க் அவஸ்தி கொல்லப்பட்ட சம்பவம் இந்திய மாணவர்களிடையே பெரும் பீதியைக் கிளப்பியுள்ளது.
செவ்வாய்க்கிழமை டொராண்டோ பல்கலைக்கழகத்தின் ஸ்கார்பரோ வளாகத்திற்கு அருகே துப்பாக்கிதாரியால் 20 வயது இந்திய மாணவர் ஷிவாங்க் அவஸ்தி சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் போலீசாரால் படுகாயமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட அவஸ்தி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்பே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, சந்தேக நபரைத் தேடி வருகின்றனர்.
"ஹைலேண்ட் க்ரீக் டிரெயில் மற்றும் ஓல்ட் கிங்ஸ்டன் சாலை பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3:34 மணியளவில் தெரியாத ஒரு அழைப்பிற்கு போலீசார் பதிலளித்தனர். பலத்த காயங்களுடன் ஒரு நபர் இருப்பதாக வந்த புகாரின் பேரில் அதிகாரிகள் பதிலளித்தனர். துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் ஒரு பாதிக்கப்பட்டவரை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது" என்று போலீசார் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளனர். போலீசார் வருவதற்கு முன்பே சந்தேக நபர் அப்பகுதியை விட்டு ஓடிவிட்டதாக அந்த அறிக்கையில் ரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: போலீஸ் மீது பெட்ரோல் குண்டு வீச்சு... காலில் பாய்ந்த தோட்டா... பிரபல ரவுடி சுட்டுப்பிடிப்பு...!
டொராண்டோ ஸ்கார்பரோ பல்கலைக்கழக மாணவரான ஷிவாங்க் அவஸ்தி மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். உயிரியல் அறிவியல் மாணவரான ஷிவாங்க் அவஸ்தியின் மரணம், இந்த ஆண்டு கனடாவில் 41வது கொலை சம்பவமாகும். தலைமறைவான துப்பாக்கிச் சூடு நடத்தியவரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பட்டப்பகலில் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு, சிறிது நேரத்திலேயே அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
"டொராண்டோ ஸ்கார்பரோ பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இளம் இந்திய முனைவர் பட்ட மாணவர் திரு. ஷிவாங்க் அவஸ்தியின் துயர மரணம் குறித்து நாங்கள் ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்துகிறோம். இந்த கடினமான நேரத்தில் துக்கமடைந்த குடும்பத்தினருடன் துணைத் தூதரகம் தொடர்பில் உள்ளது, மேலும் உள்ளூர் அதிகாரிகளுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பில் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது" என்றும் டொராண்டோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம், டொராண்டோவில் 30 வயது இந்தியப் பெண் ஹிமான்ஷி குரானா கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் அவருடன் நெருக்கமான தொடர்பில் இருந்த அப்துல் கஃபூரி என்ற 32 வயது இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது மீண்டும் டொராண்டோவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING அதிகாலையிலேயே ஷாக்... நீதிமன்ற வாசலிலேயே காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை...!