#BREAKING அடுத்தடுத்து பாய்ந்த 4 குண்டுகள்... அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை...!
கலிபோர்னியாவில் இந்திய மாணவர் அமெரிக்க காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கலிபோர்னியாவின் சாண்டா கிளாராவில் தெலுங்கானாவைச் சேர்ந்த 32 வயது மாணவர் முகமது நிஜாமுதீன், தனது அறைத் தோழரை கத்தியால் தாக்கியதாகக் கூறப்படும் நிலையில், போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
2016ம் ஆண்டு புளோரிடாவில் மேற்படிப்பிற்காக சென்ற நிஜாமுதீன், சாண்டா கிளாராவில் வீடு எடுத்து வசித்து வந்துள்ளார். அதில் அவருடன் இருந்த நண்பருடன் செப்டம்பர் 3ம் தேதி காலை 6.08 மணி அளவில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது நிஜாமுதீன் தனது நண்பரை கத்தியால் தாக்கியதாக சாண்டா கிளாரா காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அப்போது சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நிஜாமுதீனைக் கத்தியைக் கீழே போட வலியுறுத்தியுள்ளனர். ஆனால் அவர் மறுத்ததோடு, போலீசாரையும் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 குண்டுகள் பாய்ந்து நிஜாமுதீன் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். கத்தியால் குத்தப்பட்டதில் காயமடைந்த நபரை மீட்டு போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதையும் படிங்க: அதிகாலையிலேயே குலுங்கிய பூமி... மீண்டும் பயங்கர நிலநடுக்கம்... சுனாமி எச்சரிக்கை விடுப்பு...!
கர்நாடகா மாநிலம் ராய்ச்சூரைச் சேர்ந்த நிஜாமுதீனின் தந்தை ஹுஸ்னுதீன் ஓய்வு பெற்ற ஆசிரியராவார். கடந்த செப்டம்பர் 3ம் தேதியே நிஜாமுதீன் இறந்திருந்தாலும் நேற்று தான் அவருக்கு அதிகாரப்பூர்வ தகவல் கிடைக்கப்பெற்றதாக தெரிவித்துள்ளார்.
"என் மகனுக்கு பலமுறை போன் செய்ய முயற்சித்தேன், ஆனால் அவனது போன் அணைக்கப்பட்டிருந்தது. பிறகுதான் அவன் கொல்லப்பட்டதை அறிந்தோம்," என்று ஹுஸ்னுதீன் ஆழ்ந்த அதிர்ச்சியுடன் கூறினார். சமூக சேவகரும் மஜ்லிஸ் பச்சாவ் தெஹ்ரீக் தலைவருமான அம்ஜெத் உல்லா கான், தனது உடலை இந்தியாவுக்குக் கொண்டுவர உதவி கோரி வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதையும் படிங்க: போடுறா வெடிய... நாளை விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி... ஆனா போலீஸ் கொடுத்த அதிரடி ஷாக்...!