ஜப்பானுக்கு போறீங்களா..?? இந்திய சுற்றுலா பயணிகளுக்கு ஒரு பெரிய ரிலீஃப்..!! வருகிறது புதிய சேவை..!!
ஜப்பானுக்கு செல்லும் இந்தியச் சுற்றுலா பயணிகளின் சிரமத்தை போக்க, அந்நாட்டில் யுபிஐ பணப்பரிவர்த்தனை சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜப்பானுக்கு செல்லும் இந்திய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதால், அந்நாட்டில் இந்தியாவின் Unified Payments Interface (UPI) பணப்பரிவர்த்தனை சேவை விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதனால், இந்திய பயணிகள் ஜப்பானில் QR கோட் ஸ்கேன் செய்து எளிதாக பணம் செலுத்த முடியும்.
நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) இன் சர்வதேச பிரிவான NPCI International Payments Limited (NIPL) மற்றும் ஜப்பானின் NTT DATA நிறுவனம் இடையே கடந்த ஆண்டு அக்டோபரில் Memorandum of Understanding (MoU) கையெழுத்தானது. இதன்படி, 2026 நிதியாண்டில் (FY26) டிரையல் அடிப்படையில் UPI சேவை தொடங்கப்பட உள்ளது. இந்திய பயணிகள் தங்கள் UPI செயலிகளைப் பயன்படுத்தி, NTT DATA உடன் இணைந்த ஜப்பானிய வணிகர்களிடம் QR கோட் ஸ்கேன் செய்து உடனடியாக பணம் செலுத்தலாம். இதனால், அவர்களின் இந்திய வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாக தொகை பிடிக்கப்படும்.
இந்த முயற்சியின் முக்கிய நோக்கம், ஜப்பானுக்கு வரும் இந்திய சுற்றுலா பயணிகளின் செலவுகளை எளிதாக்குவதே. ஜப்பான் நேஷனல் டூரிசம் ஆர்கனைசேஷன் தரவின்படி, 2025-இல் இந்தியாவிலிருந்து 3,15,100 பேர் ஜப்பானைப் பார்வையிட்டனர். இது 2024-ஐ விட 35 சதவீதம் அதிகரிப்பு. 2025-ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை மட்டும் 2,08,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் விஜயம் செய்துள்ளனர், இது முந்தைய ஆண்டைவிட 36 சதவீதம் உயர்வு.
இதையும் படிங்க: ஜப்பானுக்கு இந்தந்த பொருட்கள் ஏற்றுமதிக்கு தடை..!! சீனா அறிவிப்பு..!! தைவான் பதற்றத்தால் புதிய வர்த்தக யுத்தம்?
NTT DATA ஜப்பானின் பேமெண்ட்ஸ் தலைவர் மசானோரி குரிஹாரா கூறுகையில், “UPI-யை ஜப்பானில் அறிமுகம் செய்வது இந்திய சுற்றுலா பயணிகளுக்கு ஷாப்பிங் மற்றும் பணப்பரிவர்த்தனைகளை எளிதாக்கும். அதேநேரம், ஜப்பானிய வணிகர்களுக்கு புதிய வணிக வாய்ப்புகளை உருவாக்கும்” என்றார்.
UPI, 2016-இல் இந்திய அரசின் ஆதரவுடன் தொடங்கப்பட்டது. இது உலகின் மிகப்பெரிய ரியல்-டைம் பேமெண்ட் சிஸ்டமாக வளர்ந்துள்ளது. 2024 நிதியாண்டில் 185.8 பில்லியன் பரிவர்த்தனைகள் நடைபெற்றன, 42 சதவீதம் அதிகரிப்பு. இந்தியாவில் 6 மில்லியன் கடைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு முன், பூட்டான், சிங்கப்பூர், பிரான்ஸ், இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 8 நாடுகளில் UPI சேவை வெற்றிகரமாக அறிமுகமாகியுள்ளது. ஜப்பானில் இது கிழக்கு ஆசியாவில் முதல் முறையாகும்.
இந்த ஒப்பந்தம் இந்திய சுற்றுலா பயணிகளுக்கு பணப்பரிவர்த்தனை சுமையைக் குறைக்கும். போட்டோக்கள், உணவு, போக்குவரத்து போன்றவற்றுக்கு ரொக்கம் அல்லது வெளிநாட்டு அட்டைகள் தேவையின்றி UPI மூலம் செலுத்த முடியும். இது ஜப்பானின் சுற்றுலாத் துறையையும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவிலிருந்து வெளிநாட்டுப் பயணங்கள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், UPI-யின் உலகளாவிய விரிவாக்கம் தொடரும் என்பது உறுதியாகியுள்ளது.
இதையும் படிங்க: கொடைக்கானல் போறீங்களா..?? இங்கெல்லாம் இன்று NOT ALLOWED..!! நோட் பண்ணிக்கோங்க..!!