×
 

புதிய புயலைக் கிளப்பிவிட்ட டிரம்ப்... கடுமையான கட்டுப்பாடுகள்... அடுத்த 3 ஆண்டுகளுக்கு இந்தியர்களுக்கு ஆப்பு...!

இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு குடியேறியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அடுத்த 3 ஆண்டுகளுக்கு இந்தியர்களுக்கு கிரீன் கார்டு கிடையாது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு டிரம்ப் அரசு மற்றொரு அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு குடியேறியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அடுத்த 3 ஆண்டுகளுக்கு இந்தியர்களுக்கு கிரீன் கார்டு கிடையாது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்திய விசா வைத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை கொடுத்து வருகிறார். ஏற்கனவே H1B விசா கட்டணத்தை அதிகரித்து மூச்சுத் திணறி வைத்த டிரம்ப் , சமீபத்தில் அமெரிக்கா வாழ் இந்தியர்களுக்கு மற்றொரு அதிர்ச்சியை கொடுத்துள்ளார். அமெரிக்க அரசின் சலுகைகளைப் பெற உதவும் க்ரீன் கார்டுகளை பிற நாட்டவர்கள் பெறுவதில் பல விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. குறிப்பாக, க்ரீன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள், அமெரிக்கா குறித்து கேட்கப்படும் கேள்விகள் உள்ளிட்டவை அடங்கிய கடுமையான தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக உள்ளது. 

இந்தியர்கள், 2029-ஆம் ஆண்டு வரை, அமெரிக்காவில் க்ரீன் கார்டுகளைப் பெற முடியாது என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், 2024 வரை 1 மில்லியனுக்கும் அதிகமான வெளிநாடு வாழ் இந்தியர்கள் அமெரிக்க கிரீன் கார்டுக்காக காத்திருக்கிறார்கள். இதனிடையே, டிரம்பின் இந்த முடிவு அமெரிக்க வாழ் இந்தியர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

இதையும் படிங்க: ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ் பகுதி... சும்மா வெளுக்க போகுது... தப்புமா தமிழகம்?

அமெரிக்கா சொல்லும் காரணம் என்ன?

அமெரிக்க அதிகாரிகள் இதைச் செய்வதற்கு பல காரணங்களைக் கூறுகின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் அமெரிக்காவிற்கு குறைந்த குடியேற்றம் கொண்ட நாடுகளிலிருந்து விண்ணப்பதாரர்களுக்கு கிரீன் கார்டு வழங்க அந்நாடு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 50,000 க்கும் குறைவான குடியேறிகளைக் கொண்ட நாடுகளுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. இதற்கிடையில், அனைத்து நாடுகளிலிருந்தும் குடியேறிகளுக்கு அமெரிக்காவில் வாய்ப்பு அளிக்கும் நோக்கத்துடன் இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவிற்கு கட்டுபாடு விதிக்கப்பட்டது ஏன்?

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் இருந்து குடியேற்றம் அதிகரித்து வருவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதனால் கிரீன் கார்டு பெறுவதற்கான தகுதி வரம்பை இந்தியர்கள் தாண்டிவிட்டதாக கூறப்படுக்கிறது. 2022-ஆம் ஆண்டு மட்டுமே இந்தியாவிலிருந்து ஒன்றே கால் லட்சம் பேர் அமெரிக்காவுக்கு குடியேறிய நிலையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, 2021 இல் 93,450 இந்தியர்கள் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்துள்ளனர். 2022ம் ஆண்டு அந்த எண்ணிக்கை 1,27,010 ஆக அதிகரித்தது. அதேசமயம் இதே காலக்கட்டத்தில் தென் அமெரிக்கர்கள் 99,030 பேரும், ஆப்பிரிக்கர்கள் 89,570 பேரும்,  ஐரோப்பியர்கள் 75,610 பேரும் மட்டுமே அமெரிக்காவில் கிரீன் கார்டு பெற்று குடியேறியுள்ளனர். 

2023ம் ஆண்டு மட்டும் 78,070 இந்தியர்கள் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்ததாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அதனால்தான் 2028 வரை இந்தியர்களுக்கு கிரீன் கார்டு விசா கிடையாது என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.  இந்தியாவுடன், வங்கதேசம், சீனா, வெனிசுலா, பிலிப்பைன்ஸ், கியூபா, கொலம்பியா, பிரேசில், கனடா, தென் கொரியா, கனடா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் குடிமக்களும் கிரீன் கார்டு வழங்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 
 

இதையும் படிங்க: தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும்... தீபாவளி பரிசு கொடுத்த முதல்வர் ரங்கசாமி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share