×
 

ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா மனிதநேய உதவி! 2.5 டன் மருத்துவ பொருட்கள் காபூல் சென்றடைந்தது!

பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவும் வகையில், 2.5 டன் எடையுள்ள மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் அண்மையில் நடத்திய வான்வழித் தாக்குதலில் காயமடைந்தவர்களுக்குத் தேவையான அவசர கால மருத்துவ உதவிகளை இந்தியா இன்று வழங்கியுள்ளது. கடந்த மார்ச் 16-ஆம் தேதி, ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஒரு முக்கிய மருத்துவமனையைக் குறிவைத்து பாகிஸ்தான் படைகள் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தின. இந்தத் துயரமான சம்பவத்தில் சுமார் 400 பேர் உயிரிழந்தனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகள் அங்கு பற்றாக்குறையாக உள்ள நிலையில், இந்திய அரசாங்கம் உடனடியாகச் செயல்பட்டுள்ளது. சுமார் 2.5 டன் எடையுள்ள உயிர் காக்கும் மருந்துகள், அறுவை சிகிச்சை உபகரணங்கள் மற்றும் அத்தியாவசிய மருத்துவப் பொருட்களைத் தனி விமானம் மூலம் ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா அனுப்பி வைத்துள்ளது.

இதையும் படிங்க: காபூல் மருத்துவமனை மீது தாக்குதல்! பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்!

பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழலிலும், மனிதாபிமான அடிப்படையில் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. முன்னதாக, இந்தப் பாகிஸ்தான் தாக்குதலுக்குச் சர்வதேச நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இந்தியா முதற்கட்டமாக இந்த மருத்துவ உதவிகளைச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த மருந்துகள் காபூலில் உள்ள சிகிச்சை மையங்களுக்கு உடனடியாக விநியோகிக்கப்படும் என இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: வெடித்தது போர் !! மாறி மாறி தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான்..!! நிலவும் பதற்றம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share