உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல்..! மீண்டும் முதலிடத்தில் பின்லாந்து..!
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் எட்டாவது முறையாக பின்லாந்து முதல் இடத்தை பெற்றுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20 ஆம் தேதி சர்வதேச மகிழ்ச்சி தினமாக ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது, இது உலகெங்கிலும் உள்ள மனிதர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கிறது. மகிழ்ச்சியைப் பின்தொடர்வது ஒரு அடிப்படை மனித குறிக்கோள் என்பதை உணர்ந்த பொதுச் சபை, நிலையான வளர்ச்சி , வறுமை ஒழிப்பு, மகிழ்ச்சி மற்றும் அனைத்து மக்களின் நல்வாழ்வை ஊக்குவிக்கும் பொருளாதார வளர்ச்சியின் அவசியத்தையும் உணர்த்தும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது
சர்வதேச மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் உலகின் மகிழ்ச்சியான நாடுகளைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. இதற்கென உலகின் 147 நாடுகளில் மக்கள் வாழ்க்கைத்தரம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது சமூக ஆதரவு, சுகாதாரம், சுதந்திரம், பெருந்தன்மை, ஊழல் குறித்த மக்கள் எண்ணம், மொத்த உள்நாட்டு உற்பத்தி உள்ளிட்டவை ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.
இதையும் படிங்க: முதல்வர், அமைச்சர்களின் சம்பளம் 100% உயர்வு.. கர்நாடகாவில் நாளை மசோதா தாக்கல்..!
இதில், அதிகபட்ச புள்ளிகள் 10 என்றால், முதலிடம் பெற்ற நாடான பின்லாந்து 7.74 புள்ளிகளுடன் உலகின் மகிழ்ச்சியான நாடு என்ற தகுதியை பெற்றது. இதனைத் தொடர்ந்து, டென்மார்க் 2வது இடத்தையும் ஐஸ்லாந்து மூன்றாவது இடத்தையும், நார்வே நான்காவது இடத்தையும், ஸ்வீடன் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளது
எதிர்காலத்தின் மீதான நம்பிக்கை, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் இருந்து உதவிகளை பெறுவது போன்றவை மக்களின் சந்தோஷத்திற்கான காரணங்களாக கூறப்பட்டுள்ளன. இந்த மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து தொடர்ந்து எட்டாம் ஆண்டாக முதல் இடத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மொத்தமுள்ள 147 நாடுகளில் இந்தியாவிற்கு 118வது இடம் கிடைத்துள்ளது. மேலும், இலங்கை 133-வது இடத்திலும், வங்கதேசம் 134வது இடத்திலும், நேபாளம் 92வது இடத்திலும், சீனா 68வது இடத்திலும் உள்ளன. 2012ம் ஆண்டில் 11 வது இடத்தில் இருந்த அமெரிக்கா, 24 வது இடத்திற்கு சென்றுள்ளது. தற்போது இங்கிலாந்து 23வது இடத்தைப் பிடித்துள்ளது.
கல்வி, சமூகச்சூழல், பொருளாதாரம், மக்கள் வாழ்க்கைத்தரம் அனைத்திலும் இந்தியாவை விட பின் தங்கியுள்ள பாகிஸ்தான் முன்னணியிலும், இந்தியா பின்னடைவு கண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது, முடிவுகள் மற்றும் அறிக்கைகள் ஆய்வுகளின் உண்மை தன்மையை கேள்விக்குள்ளாக்குவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: அதை நாங்கதான் செய்யணும்.. நீங்க ஏன் போராடுறீங்க அண்ணாமலை..? சீமான் சுளீர் கேள்வி.!