×
 

அமெரிக்க ராணுவ தளங்களை பந்தாடிய ஈரான்!! சீரமைக்க பல கோடி செலவாகும் என அமெரிக்கா புலம்பல்!

மேற்காசியாவில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் நடத்திய கடுமையான தாக்குதல்களால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனை சீரமைக்க கோடிக்கணக்கான ரூபாய் தேவைப்படலாம் எனவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வாஷிங்டன்: ஈரான் நடத்திய கடுமையான தாக்குதல்களால் மேற்காசியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சேதங்களை சீரமைக்க கோடிக்கணக்கான ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கின. முதல் நாளிலேயே ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். ஆத்திரமடைந்த ஈரான், இஸ்ரேல் மற்றும் மேற்காசியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது பலத்த பதிலடி தாக்குதலை நடத்தியது. 40 நாட்களுக்கு மேல் நீடித்த இந்தப் போரில், ஈரான் 7 நாடுகளில் உள்ள 11 அமெரிக்க ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்கியது.

ஈரான் தாக்குதலில் உயிரிழப்புகளை அதிகப்படுத்துவதை விட, அமெரிக்க படைகளின் தொழில்நுட்ப உட்கட்டமைப்புகளை முடக்குவதில் அதிக கவனம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது. பென்டகன் இதுவரை முழு சேத மதிப்பீட்டை வெளியிட தயங்கினாலும், புலனாய்வு அறிக்கைகள் மற்றும் செயற்கைக்கோள் படங்கள் மூலம் கிடைத்த தகவல்களின்படி, உட்கட்டமைப்பு சேதம் மிக அதிகம் என்று அமெரிக்க அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: அழுத்தத்திற்கு அஞ்சி பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம்!! அமெரிக்காவுக்கு ஈரான் திட்டவட்டம்!!

சேதங்களை சீரமைக்க 18.80 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் தேவைப்படும் என்று பென்டகன் அமெரிக்க அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது. போர் தொடங்கிய முதல் வாரத்திலேயே அமெரிக்கா தன் ராணுவ நடவடிக்கைகளுக்காக மட்டும் 1.03 லட்சம் கோடி ரூபாய் செலவிட்டது. போர் தொடங்குவதற்கு முன்பே அதிபர் டொனால்ட் டிரம்ப் 1.5 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் பாதுகாப்பு நிதியை கோரியிருந்தார். இது முந்தைய ஆண்டை விட 50 சதவீதம் அதிகம்.

தற்போது அமெரிக்க பார்லிமென்ட் 2026ஆம் ஆண்டுக்கான 78.81 லட்சம் கோடி ரூபாய் பாதுகாப்பு பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இருப்பினும், ஈரான் தாக்குதலால் ஏற்பட்ட சேதத்தை சீரமைக்க கூடுதல் நிதி தேவைப்படும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தற்போது அமைதி பேச்சுக்காக தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சேத மதிப்பீடு மற்றும் சீரமைப்புப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இந்தப் போர் அமெரிக்காவுக்கு பெரும் பொருளாதார சுமையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: எங்க கண்ணிவெடி வச்சோம்னு தெரிலையே!! ஹார்முஸ் ஜலசந்தி திறப்பில் சிக்கல்! கையை பிசையும் ஈரான்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share