இஸ்ரேல் தாக்குதல்: ஈரானின் முக்கியப்புள்ளி உயிரிழப்பு.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் புரட்சிகர காவல்படையின் ஏவுகணை திட்ட தலைவர் உயிரிழந்தார் என்ற தகவல் தற்போது அது உண்மை என உறுதி செய்யப்பட்டது.
ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, ஈரானுடைய தலைநகரான நெதஹ்ரானை குறிவைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. யூரேனியம் செறிவூட்டலைத் தொடர்ந்தால் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் தொடர்ந்து எச்சரித்து வந்தது.
ஈரானின் அணுசக்தி செறிவூட்டல் திட்டம், ஈரானின் அணு ஆயுதமயமாக்கல் திட்டம், ஈரானின் முக்கிய செறிவூட்டல் வசதிகள், முன்னணி அணு விஞ்ஞானிகள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை திட்ட மையத்தை குறிவைத்து தாக்கியதாக நெதன்யாகு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் ஈரானின் அணுசக்தி மற்றும் ராணுவ அமைப்புகளை முற்றிலும் அழிக்கும் வரை இந்த தாக்குதல் தொடரும் என நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: தொடரும் பதற்றம்.. இறங்கி அடிக்கும் இஸ்ரேல்.. சொல்லி அடிக்க காத்திருக்கும் ஈரான்..!
ஈரான் தலைநகர் மீது நடத்தப்பட்ட இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் ஈரானின் முக்கிய ராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்திருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தலைமையகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. தொடர்ந்து ஈரான் அணு விஞ்ஞானிகள் அப்பாஸி-தவானி, முகமது மெக்தி தெக்ரான்சி மற்றும் ஈரானிய ராணுவ படைகளின் தலைமை தளபதி முகமது பகேரி, ஈரானிய படைகளை ஒருங்கிணைக்கும் தளபதி கோலமாலி ரஷித் ஆகியோர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், ஈரான் புரட்சிகர காவல்படையின் ஏவுகணை திட்ட தலைவரான ஜெனரல் அமீர் அலி ஹாஜிசாதே தாக்குதலில் உயிரிழந்தார் என்ற தகவலை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே அவரது மரணம் குறித்த வதந்திகள் ஊடகங்களில் பரவி வந்த நிலையில், அதனை ஒப்புக்கொள்ளாமல் இருந்து வந்த இஸ்ரேல் தற்போது உறுதி செய்து அவரது மரணத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஜெனரல் அமீர் அலி ஈரான் புரட்சிகர காவல்படையின் முக்கிய தளபதியாகவும், பாலிஸ்டிக் ஏவுகணை ஆயுதக் கிடங்கின் மேற்பார்வையாளராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஈரானின் இதயத்தில் ஏவுகணையை இறக்கிய இஸ்ரேல்... முக்கிய தலைவர் மரணம்?