ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பலுக்கு அனுமதி! அமெரிக்காவுக்கு ஆப்பு!! ஈரான் புதிய நிபந்தனை!!
சீன யுவான் கரன்சியில் வர்த்தகம் செய்யும் கப்பல்களுக்கு மட்டும், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அனுமதி வழங்கும் திட்டத்தை ஈரான் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரான், உலக எண்ணெய் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்களை அனுமதிப்பதற்கு புதிய திட்டத்தை பரிசீலித்து வருகிறது. ஆனால், இது சீன யுவான் நாணயத்தில் வர்த்தகம் செய்யும் கப்பல்களுக்கு மட்டுமே என்று அதிரடி நிபந்தனை விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை சவால் செய்யும் முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.
ஹார்முஸ் ஜலசந்தி உலகின் 20 சதவீத எண்ணெய் விநியோகம் நடக்கும் மிக முக்கிய பாதை. ஈரான் இதை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. தற்போதைய அமெரிக்கா-இஸ்ரேல் மோதலால் ஜலசந்தி முடங்கியுள்ளது. அனுமதியின்றி செல்லும் கச்சா எண்ணெய் கப்பல்களை தாக்குவோம் என ஈரான் எச்சரித்துள்ளது. இதனால் உலக அளவில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு, விலைகள் உயர்ந்துள்ளன.
ஐக்கிய நாடுகள் சபை, ஜலசந்தி முடங்கினால் உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விநியோக சங்கிலி பெரிதும் பாதிக்கப்படும் என எச்சரித்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப், ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க பிரிட்டன், பிரான்ஸ், சீனா உள்ளிட்ட நட்பு நாடுகள் போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: கார்க் தீவு மீதான தாக்குதல் தீவிரமாகும்!! ஜாலிக்கு கூட தாக்குவோம்! ஈரானுக்கு அதிபர் ட்ரம்ப் மிரட்டல்!
இந்நிலையில், ஈரான் அரசு மூத்த அதிகாரி ஒருவர் அமெரிக்க ஊடகமான CNN-க்கு அளித்த பேட்டியில், "குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கச்சா எண்ணெய் கப்பல்களை ஹார்முஸ் வழியாக அனுமதிக்கலாம். ஆனால், அந்த வர்த்தகம் அமெரிக்க டாலரில் இருக்கக்கூடாது. சீன யுவான் நாணயத்தில் மட்டுமே நடக்க வேண்டும். அப்போதுதான் அனுமதி வழங்குவோம்" என தெரிவித்தார்.
இந்த முடிவு சீனாவுக்கு பெரும் நன்மை அளிக்கும். ஏனெனில், சீனா ஈரானின் மிகப்பெரிய எண்ணெய் வாங்குபவர். யுவான் மூலம் எண்ணெய் வர்த்தகம் அதிகரித்தால், உலகில் டாலரின் ஆதிக்கம் குறையும். ஆனால், சீன ஆய்வாளர்கள் இதை செயல்படுத்துவதில் பாதுகாப்பு அபாயங்கள், நடைமுறை சிக்கல்கள் உள்ளதாக எச்சரித்துள்ளனர்.
இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், உலக எண்ணெய் சந்தை, பொருளாதாரம் ஆகியவற்றில் பெரும் மாற்றங்கள் ஏற்படும். எண்ணெய் விலை ஏற்ற இறக்கம், அத்தியாவசிய பொருட்கள் பற்றாக்குறை போன்றவை ஏற்படலாம். மேற்காசிய பதற்றம் மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
இதையும் படிங்க: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு? இந்தியா வரும் எரிவாயு கப்பல்கள்! ஈரானுடன் மத்திய அரசு தீவிர பேச்சு!