×
 

மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தானுக்கு தகுதி இல்லை!! மேற்காசிய போர்! ஈரான் எம்.பி காட்டம்!

அமெரிக்காவுடனான போர் நிறுத்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யும் தகுதி பாகிஸ்தானுக்கு கிடையாது என்று ஈரான் எம்பி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், அமெரிக்கா-ஈரான் இடையிலான போர் நிறுத்த விவகாரத்தில் பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்யும் தகுதி இல்லை என்று தெரிவித்துள்ளார். இது இரு நாடுகளுக்கு இடையே நடைபெறும் அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்கா-இஸ்ரேல் தரப்பில் ஈரான் மீது தாக்குதல் தொடங்கியது. இதனால் ஹார்மூஸ் ஜலசந்தி முடக்கப்பட்டு, உலக அளவில் எரிசக்தி பற்றாக்குறை ஏற்பட்டது. பாகிஸ்தான் முயற்சியால் மே 1-ம் தேதி வரை போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. போர் பதற்றம் ஓரளவு தணிந்த நிலையில், இரண்டாம் கட்ட பேச்சுக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்தது. ஆனால் ஈரான் குழுவினர் அமெரிக்காவுடன் நேரடி பேச்சுக்கு மறுப்பு தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், தனது குழுவினரின் பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்தார்.

இந்தச் சூழலில் ஈரான் நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை குழு செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் ரெசாய் (Ebrahim Rezaei), எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

இதையும் படிங்க: பழிக்கு பழி!! அமெரிக்க ராணுவ கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்! மூளும் போர்?!

அதில், “பாகிஸ்தான் எங்களுக்கு நல்ல நண்பரும் அண்டை நாடும்தான். ஆனால் அமெரிக்கா-ஈரான் இடையே மத்தியஸ்தம் செய்யும் தகுதி அதற்கு இல்லை” என்று கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது: பாகிஸ்தான் அமெரிக்காவின் நலன்களுடன் ஒத்துப்போகும் போக்கைக் கொண்டுள்ளது. அமெரிக்காவை வெளிப்படையாக விமர்சிப்பதைத் தவிர்க்கிறது. லெபனான் விவகாரம், முடக்கப்பட்ட சொத்துக்கள் உள்ளிட்ட பல விஷயங்களில் அமெரிக்கா தனது வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலையிலும் பாகிஸ்தான் அதைச் சுட்டிக்காட்டத் தவறிவிட்டது. ஒரு மத்தியஸ்தர் பாரபட்சமற்றவராக இருக்க வேண்டும். எப்போதும் ஒரு பக்கம் சாய்ந்து கொண்டிருக்கக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.

ஈரான்-அமெரிக்கா இடையே போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுகள் தற்போது சிக்கலில் உள்ளன. பாகிஸ்தான் முயற்சியால் ஏற்பட்ட முதல் கட்ட போர் நிறுத்தம் இரு தரப்புக்கும் சற்று நிம்மதியை அளித்தாலும், இரண்டாம் கட்ட பேச்சு நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஈரான் எம்பியின் இந்தக் கருத்து, பாகிஸ்தானின் மத்தியஸ்தப் பங்குக்கு சவாலாக அமைந்துள்ளது.

சர்வதேச அரசியல் வட்டாரங்களில் இந்த விவகாரம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அமெரிக்கா-ஈரான் இடையே அடுத்தகட்ட பேச்சு எங்கு, எப்படி நடைபெறும் என்பதை அடுத்த சில நாட்களில் பார்க்க வேண்டும். 

இதையும் படிங்க: அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம்! இந்தியா வரவேற்பு!! நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும் என நம்பிக்கை!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share