×
 

அமெரிக்க ராணுவ வீரர்களை கொன்றால் ரூ.28 லட்சம்!! ஈரான் வெளியிட்ட அதிரடி சன்மான அறிவிப்பு!

அமெரிக்க ராணுவ வீரர்களை கொன்றாலோ அல்லது உயிருடன் பிடித்துக் கொடுத்தாலோ ரூ.28 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று ஈரான் இன்று அறிவித்துள்ளது.

அமெரிக்கா–ஈரான் இடையிலான மோதல் நீடித்து வரும் நிலையில், அமெரிக்க ராணுவ வீரர்கள் தொடர்பாக ஈரான் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரரை கொன்றாலோ அல்லது உயிருடன் பிடித்துக் கொடுத்தாலோ ரூ.28 லட்சம் வரை சன்மானம் வழங்கப்படும் என ஈரான் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நீடித்து வரும் மோதலால் மேற்காசியாவில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இரு தரப்பினரும் பரஸ்பரம் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக கூறப்படும் நிலையில், போர் எப்போது முடிவுக்கு வரும் என்பது தெளிவாகவில்லை.

இதையும் படிங்க: ஹார்முஸ் ஜலசந்தி எங்கள் உத்தரவுக்குத்தான் திறக்கும்! அமெரிக்கா அதிபர் டிரம்புக்கு ஈரான் நேரடி பதிலடி

இதனிடையே, உலகின் முக்கிய கடல்வழிப் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தியை யார் கட்டுப்படுத்துவது என்ற விவகாரமும் இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

இந்த சூழலில், ஈரான் ராணுவ தளபதி அமீர் ஹதாமி வெளியிட்டதாக கூறப்படும் அறிவிப்பு கவனம் பெற்றுள்ளது. அதன்படி, ஈரான் எல்லைக்குள் நுழையும் அமெரிக்க ராணுவ வீரர்களை கொன்றாலோ அல்லது உயிருடன் பிடித்து ஒப்படைத்தாலோ சுமார் ரூ.28 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அமெரிக்க வீரரை பெண் ஒருவர் பிடித்து ஒப்படைத்தால் வழங்கப்படும் சன்மானத் தொகை இரட்டிப்பாக இருக்கும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அறிவிப்பு அமெரிக்கா–ஈரான் மோதல் எந்த அளவுக்கு தீவிரமடைந்துள்ளது என்பதை வெளிப்படுத்துவதாக சர்வதேச விவகாரங்களை கவனித்து வருபவர்கள் கருதுகின்றனர்.

அதே நேரத்தில், ஈரான் எல்லைக்குள் அமெரிக்க தரைப்படைகள் நேரடியாக களமிறங்கியுள்ளனவா என்பது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படும் அமெரிக்க விமானியை மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்ட அவசரகால நடவடிக்கையைத் தவிர, ஈரானில் அமெரிக்கப் படைகள் நேரடியாக களமிறக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஈரானின் இந்த அறிவிப்பு வெறும் எச்சரிக்கையா அல்லது எதிர்கால ராணுவ நடவடிக்கைகளுக்கான முன்னோட்டமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் மேலும் தீவிரமடைந்தால், மேற்காசியாவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் அதன் தாக்கம் அதிகரிக்கக்கூடும்.

இதையும் படிங்க: ஹார்முஸ் நீரிணை இனி அமெரிக்காவுக்கு சொந்தம்! ஈரானை வீழ்த்தியதும் அடுத்த அதிரடி! ட்ரம்ப் சூசகம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share