பதற வைக்கும் ஈரான் ஆயுத கிடங்கு!! வீச வீச குறையாத குண்டு! குலை நடுங்கும் கொடிய ஆயுதங்கள்!
அமெரிக்கா, இஸ்ரேலுடன், சில ஐரோப்பிய நாடுகளும், பாதிக்கப்பட்ட முஸ்லிம் நாடுகளும் சேர்ந்து ஈரானை தாக்கக்கூடும் அபாயம் நிலவி வரும் நிலையில், உலகையே மிரட்டும் வீடியோ ஒன்றை ஈரான் ராணுவம் வெளியிட்டுள்ளது.
மத்திய கிழக்கில் ஈரான்-இஸ்ரேல்-அமெரிக்கா போர் மூன்றாவது நாளாக தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல்-அமெரிக்கா இணைந்து ஈரான் மீது குண்டு மழை பொழிந்து வரும் நிலையில், ஈரான் பதிலடியாக இஸ்ரேல் மீது சக்திவாய்ந்த பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி வருகிறது.
அமெரிக்க ராணுவ தளங்கள் உள்ள 8 முஸ்லிம் நாடுகளை (சவுதி, பஹ்ரைன், கத்தார், யுஏஇ, ஜோர்டான், ஈராக், ஓமன், குவைத்) குறிவைத்து ட்ரோன்-ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது. துபாய் விமான நிலையம் உள்ளிட்ட பல இடங்கள் பெரும் சேதமடைந்துள்ளன.
இந்நிலையில், ஈரான் ராணுவம் (IRGC) உலகையே அதிர்ச்சியடையச் செய்யும் வகையில் ஒரு பாதாள கிடங்கு வீடியோவை வெளியிட்டுள்ளது. ஈரான் அரசு ஊடகமான Fars News Agency வெளியிட்ட இந்த வீடியோவில், நீண்ட பாதாள சுரங்கப் பாதைகளில் ஏராளமான ட்ரோன்கள் (Shahed-136 போன்ற கமிகேஸ் ட்ரோன்கள்) வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன. அவை ராக்கெட் லாஞ்சர்களில் ஏற்றப்பட்டு தயார் நிலையில் உள்ளன. சுரங்க சுவர்களில் ஈரான் கொடி, உச்ச தலைவர் அலி கமேனி உருவப்படங்கள் தொங்குகின்றன.
இதையும் படிங்க: ஏர்போர்ட்களில் எரிபொருள் போதுமா? கையிருப்பு எவ்ளோ? விபரம் கேட்கும் AAI!! முன்னெச்சரிக்கை நடவடிக்கை!
Iran releases footage of its drone arsenal and launches towards US-Israeli targets in the region.
— Press TV 🔻 (@PressTV) March 2, 2026
Follow https://t.co/B3zXG73Jym pic.twitter.com/FbUcK8CtqL
வீடியோவில் பல கிளைகளாக பிரிந்து செல்லும் சுரங்கங்கள் காட்டப்படுகின்றன. எங்கு பார்த்தாலும் பாலிஸ்டிக் ஏவுகணைகள், ட்ரோன்கள், வெடிபொருட்கள் குவிந்து கிடக்கின்றன. இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளை நோக்கி ட்ரோன்கள் ஏவப்படும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இது போர் நீண்ட காலம் தொடரும் என்பதை உலகுக்கு எச்சரிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த வீடியோ உண்மையான பாதாள ஆயுத கிடங்கா அல்லது பிரச்சாரத்துக்காக உருவாக்கப்பட்டதா என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால், அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல்களால் ஈரானின் ஆயுத தளங்கள் பாதிக்கப்பட்டாலும், இன்னும் பெரும் ரகசிய ஆயுத இருப்பு உள்ளது என்பதை காட்டும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. ஈரான் தொடர்ந்து பதிலடி கொடுத்து வரும் நிலையில், சில ஐரோப்பிய நாடுகளும் பாதிக்கப்பட்ட முஸ்லிம் நாடுகளும் இணைந்து ஈரானை தாக்கும் அபாயம் உள்ளது.
இதனால் உலகம் முழுவதும் பதற்றம் நிலவுகிறது. எண்ணெய் விலை உயர்வு, விமான சேவை ரத்து, பயணிகள் தவிப்பு ஆகியவை தொடர்கின்றன. இந்தியா தனது குடிமக்களை எச்சரித்து வருகிறது. போர் விரிவடைந்தால் உலக பொருளாதாரம் பெரும் சரிவை சந்திக்கும் அச்சம் நீடிக்கிறது. அமைதி பேச்சுவார்த்தைக்கு உலக நாடுகள் அழைப்பு விடுத்து வருகின்றன.
இதையும் படிங்க: ஒரு தலைவரையே கொன்னுருக்காங்க!கண்டிக்க மாட்டீங்களா? கமேனி கொலைக்கு மோடி கண்டனம் தெரிவிக்காதது ஏன்?