×
 

'Where to kill Melania?' ஈரான் வெளியிட்ட ஷாக் வீடியோ..!! டிரம்ப் குடும்பத்தை சுற்றும் புதிய சர்ச்சை!!

“மெலானியாவை எங்கு கொல்வது” என்ற தலைப்பில் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

அமெரிக்கா-ஈரான் இராணுவ மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானியத் தரப்பிலிருந்து வெளியான அதிர்ச்சி தரும் பிரச்சார வீடியோ ஒன்று சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மனைவி மெலானியா டிரம்ப் மற்றும் மகன் பாரன் டிரம்ப்பை நேரடியாக குறிவைத்து, ஈரானின் புரட்சிக் காவல் படையுடன் (IRGC) தொடர்புடைய தஸ்னிம் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த வீடியோ, “மெலானியா டிரம்ப்பை எப்படிக் கொல்வது”, “மெலானியாவை எங்கு கொல்வது” என்ற தலைப்பில் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

வீடியோவில் மெலானியாவின் மோட்டார் கேட் பயணங்கள், நியூயார்க் நகரில் உள்ள ஆடம்பரக் கடைகள் ஆகியவை விரிவாகக் காட்டப்பட்டுள்ளன. அவருடைய ஷாப்பிங் பழக்கங்கள் “உலகளாவிய சுதந்திரப் போராளிகளின்” நடவடிக்கைகளுக்கு ஏற்ற வாய்ப்புகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வாங்கும் ஆடைகளில் நரம்பு வாயு போன்ற விஷப் பொருட்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தலாம் என்ற ஆலோசனையும் இடம்பெற்றுள்ளது. வீடியோவின் இறுதியில் 20 வயதான பாரன் டிரம்புக்கு நேரடி மிரட்டல் விடுக்கப்பட்டு, “இது தொடக்கம் மட்டுமே… பாரன் டிரம்ப், நாங்கள் வருகிறோம்” என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: ஜெனரிக் மருந்து நிறுவனங்களுக்கு 2 ஆண்டுகள் வரிச் சலுகை.. டிரம்ப் அறிவிப்பு..!!

இதற்கு முன்பே டெஹ்ரானில் பிரம்மாண்ட விளம்பரப் பலகைகள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில் டிரம்ப் குடும்ப உறுப்பினர்களின் படங்கள் அமெரிக்கக் கொடியால் மூடப்பட்ட சவப்பெட்டிகளுடன் காட்டப்பட்டு, “ரத்தத்துக்கு ரத்தம்” என்ற முழக்கங்கள் இடம்பெற்றிருந்தன. இவை அமெரிக்க-ஈரான் மோதலில் ஏற்பட்ட இழப்புகளுக்குப் பதிலடியாக வெளியிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. அமெரிக்கா ஈரானின் பல இராணுவ இலக்குகளை அழித்துவிட்டதாகக் கூறப்படும் நிலையில், பேச்சுவார்த்தை முயற்சிகள் தொடர்ந்தாலும் பதற்றம் குறையவில்லை.

https://x.com/vvanwilgenburg/status/2081831806777622842/video/1

அதிபர் டிரம்ப் இதற்கு முன்பு, தன்னையோ தன் குடும்பத்தையோ குறிவைத்தால் அமெரிக்கா கடுமையான பதிலடி கொடுக்கும் என்று எச்சரித்திருந்தார். மெலானியா மற்றும் பாரன் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு தொடர்ந்து ரகசிய சேவை பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. அமெரிக்க ரகசிய சேவை இந்த வீடியோவை உணர்ந்து விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளது. இந்தப் பிரச்சாரம் சர்வதேச அளவில் கண்டனத்துக்கு உள்ளாகி, மத்திய கிழக்கு அமைதி முயற்சிகளுக்கு மேலும் சவாலாக மாறியுள்ளது.
 

இதையும் படிங்க: ஈரான் போர் உயிரிழப்புகள் வெறும் 18.. முந்தைய போர்களுடன் ஒப்பிட்டு டிரம்ப் பரபரப்பு பதிவு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share