கண்ணுக்கு கண் இல்ல!! கண்ணுக்கு தலைதான் பதிலடி!! அமெரிக்கா மொத்தமா முடங்கிடும்! போர் தொடரும் என ஈரான் திட்டவட்டம்!
போரில் ஈரானுக்கு ஏற்பட்ட அனைத்து சேதங்களுக்கும் இழப்பீடு வழங்கப்பட்டு, எங்கள் மீதான தடைகள் நீக்கப்படும் வரை போர் தொடரும் என ஈரான் உச்ச தலைவரின் ராணுவ ஆலோசகர் மொஹ்சென் ரெசாயி கூறினார்.
மேற்காசியாவில் அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தொடங்கிய போர் ஒரு மாதத்தை நெருங்கும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திடீர் திருப்பமாக 5 நாள் சண்டை நிறுத்தத்தை அறிவித்தார்.
ஹார்முஸ் ஜலசந்தியை 48 மணி நேரத்தில் திறக்காவிட்டால் ஈரானின் மின் நிலையங்களை அழித்துவிடுவோம் என டிரம்ப் எச்சரித்திருந்தார். ஆனால், ஈரானுடன் ஆக்கப்பூர்வ பேச்சுவார்த்தை நடப்பதாகக் கூறி, மின் நிலையங்கள் மீதான தாக்குதலை 5 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அவர் தெரிவித்தார்.
இதை ஈரான் உடனடியாக நிராகரித்தது. “அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை” என ஈரான் தரப்பு தெளிவுபடுத்தியது. மேலும், தங்களது மின் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தினால் வளைகுடா நாடுகளில் உள்ள மின் நிலையங்களைத் தாக்குவோம் என எச்சரித்திருந்தது.
இதையும் படிங்க: எடை குறையும் கேஸ் சிலிண்டர்! தட்டுப்பாடை தவிர்க்க புது ரூட்!! எண்ணெய் நிறுவனங்கள் ஐடியா?!
இந்த சூழலில், ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் ராணுவ ஆலோசகர் மொஹ்சென் ரெசாயி தொலைக்காட்சியில் உரையாற்றியபோது, கடும் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். “போரில் ஈரானுக்கு ஏற்பட்ட அனைத்து சேதங்களுக்கும் முழு இழப்பீடு வழங்கப்பட வேண்டும். எங்கள் மீதான அனைத்து பொருளாதாரத் தடைகளும் நீக்கப்பட வேண்டும்.
மேலும், அமெரிக்கா எங்கள் உள்விவகாரங்களில் தலையிடாது என்பதற்கு சர்வதேச சட்டபூர்வ உத்தரவாதங்கள் வழங்கப்பட வேண்டும். இவை நிறைவேறும் வரை போர் தொடரும். இது ஈரான் மக்கள், உச்ச தலைவர் மற்றும் ஆயுதப்படைகளின் உறுதியான முடிவு” என்றார்.
ரெசாயி மேலும் கூறியதாவது: “எங்கள் உள்கட்டமைப்பைத் தாக்கினால், அது இனி ‘கண்ணுக்கு கண்’ என்ற பதிலடியாக இருக்காது. கண்ணுக்கு தலை, கை, கால் என்ற அளவில் பெரும் தாக்குதலாக இருக்கும். அமெரிக்கா முழுமையாக முடங்கிவிடும்” என எச்சரித்தார்.
இந்த போர் தொடங்கியதில் இருந்து ஈரான் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும், அமெரிக்கா-இஸ்ரேல் அழுத்தங்களுக்கு அடிபணியப் போவதில்லை என்பதையும் ரெசாயியின் பேச்சு தெளிவாகக் காட்டுகிறது.
டிரம்ப் அறிவித்த 5 நாள் இடைவேளைக்கு பிறகும் ஈரான் தனது நிபந்தனைகளை முன்வைத்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மூடல் காரணமாக உலக எண்ணெய் விலை ஏற்கனவே உயர்ந்துள்ள நிலையில், இந்த புதிய மோதல் உலக பொருளாதாரத்தையும் பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.
ஈரான் தரப்பு, போர் தொடர்வதற்கான முழு பொறுப்பும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிடம் உள்ளது எனக் கூறுகிறது. சர்வதேச சமூகம் இந்த நெருக்கடியை தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. தற்போதைய சூழல் மேலும் தீவிரமடையும் அபாயம் உள்ளது.
இதையும் படிங்க: US போர் விமானங்கள் இறங்க தடை! இலங்கை செய்த தரமான சம்பவம்!! அமெரிக்காவுக்கு விழுந்த அடி!