#BREAKING உச்சக்கட்ட அதி பயங்கரம்...!! - வெடித்து சிதறும் ஈரான் தலைநகரம்... குண்டு மழை பொழியும் இஸ்ரேல்....!
தெஹ்ரானில் அமைந்துள்ள மெஹ்ராபாத் விமான நிலையம் மீது வீசப்பட்ட ஏவுகணையால், விமான நிலையம் பற்றி எரிந்து வருகிறது.
"நிபந்தனையற்ற சரணடைதல்" இல்லாமல் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். அதற்கு பதிலடியாக ஈரானின் ஐ.நா. தூதர், நாடு தன்னைத் தற்காத்துக் கொள்ள "தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்" என எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து போரை தீவிரப்படுத்த முடிவெடுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப், இஸ்ரேலுக்கு $151 மில்லியன் மதிப்புள்ள புதிய ஆயுத விற்பனைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் ராணுவம் ஈரானின் தலைநகரமான தெஹ்ரான் மீது இன்று அதிகாலை முதலே குண்டு மழை பொழியத் தொடங்கியுள்ளது. தெஹ்ரானில் அமைந்துள்ள மெஹ்ராபாத் விமான நிலையம் மீது வீசப்பட்ட ஏவுகணையால், விமான நிலையம் பற்றி எரிந்து வருகிறது.
ஈரானுடைய முக்கிய கட்டமைப்புகளை குறிவைத்து தற்பொழுது இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். ஈரானில் இருக்கக்கூடிய ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், பேருந்து நிலையங்கள், மிக முக்கியமான பாலங்கள், ஏவுகணை கட்டமைப்பு அமைப்புகள் போன்ற பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் ஈரான் நாட்டின் தலைநகரான தெஹ்ரானை குறிவைத்து தற்பொழுது தீவிர தாக்குதல் என்பது நடத்தப்பட்டு வருகிறது. தெஹ்ரான் நகரில் உள்ள மெகராபாத் விமான சர்வதேச விமான நிலையத்தின் மீதும் ஏவுகனைகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இஸ்ரேல் மேற்கொண்ட இந்த தாக்குதலால் விமான நிலையம் முழுமையாக சேதமடைந்திருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றது.
குறிப்பாக குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் தற்பொழுது வரை தீ பற்றி எறிந்து வருவதாகவும் அதை அணைப்பதற்கு தேவையான கட்டமைப்புகள் கூட இல்லாத அளவிற்கு ஈரானுடைய நிலைமை கிட்டத்தட்ட மோசமான நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் ஈரான் அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படைகளுக்கு எதிராக பதில்தாக்குதலை நடத்தி வருகிறார்கள். ஈரான் நாட்டின் பாக்தாத் நகருக்கு அருகே உள்ள அமெரிக்காவின் பெரிய ரேடாரை குறிவைத்து தாக்குதல் நடத்தி இருப்பதாகவும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றது.
இதையும் படிங்க: அப்பாடா...!! - இந்தியாவை நிம்மதி பெருமூச்சு விட வைத்த ஈரான்... ஹார்மூஸ் நீரிணை விவகாரத்தில் முக்கிய முடிவு...!
ஈரானின் தாக்குதலில் அமெரிக்காவின் இரண்டாவது பெரிய ரேடாரும் சேதமடைந்துள்ளது. அமெரிக்காவுடைய அண்டை நாடுகளில் இருக்கக்கூடிய முக்கியமான நிலைகளை குறிவைத்துதான் ஈரான் தாக்குதலை நடத்தி வருகிறார்கள். அதுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் நாட்டின் பல ஆண்டுகள் உழைப்பில் உருவாக்கப்பட்டிருந்த முக்கியமான கட்டமைப்புகள் என்பது அடித்து நொறுக்கப்பட்டு வரும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: ஈரான் கப்பல் மீது அட்டாக்..!! இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா..?? மத்திய அரசு சொல்வது என்ன..??