தரைவழி தாக்குதல் நடத்தினால் சுறாக்களுக்கு இரையாவீர்கள்!! அமெரிக்க வீரர்களுக்கு ஈரான் வார்னிங்!
அமெரிக்க படைகளை போர் பகுதியில் இருந்து விலக்கி, மக்கள் தொகை அதிகம் இருக்கும் பகுதிகள் மற்றும் பொருளாதார மையங்களில் சென்று ஒளித்து வைத்து கொள்கிறார் என ஈரானிய ஊடகங்கள் தெரிவித்தன.
ஈரான், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தரைவழி தாக்குதல் அச்சுறுத்தல் விடுத்து வரும் நிலையில், அமெரிக்க படைகளை போர் பகுதியில் இருந்து விலக்கி, மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளிலும், பொருளாதார மையங்களிலும் ஒளித்து வைத்துக் கொள்வதாக ஈரானிய ஊடகங்கள் குற்றம்சாட்டியுள்ளன.
ஈரானுக்கு எதிராக தரைவழி தாக்குதல் நடத்த அமெரிக்கா தயாரிப்பு செய்து வருவதாக டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். இதற்கு ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. “தரைவழி தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி தர தயாராக இருக்கிறோம்” என்று ஈரான் தெரிவித்துள்ளது.
ஒருபுறம் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுப்பதாகக் கூறும் அமெரிக்கா, மறுபுறம் வான், கடல் மற்றும் தரை வழியாக ஈரானை நெருக்கும் வகையில் படைகளை குவித்து வருவதாக ஈரான் குற்றம் சாட்டுகிறது.
இதையும் படிங்க: இறங்கி வரும் அமெரிக்கா! இறுமாப்பு காட்டும் ஈரான்!! போர் நிறுத்த கோரிக்கை நிராகரிப்பு!! நீடிக்கும் மோதல்!
ஈரானின் ராணுவம் நாட்டைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், உச்சபட்ச தலைவர்கள், எல்லைப் பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு தாக்குதல்களை எதிர்கொள்ள இஸ்லாமிய புரட்சிக் காவல் படை (IRGC) செயல்பட்டு வருகிறது. இந்த இரு படைகளின் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் உச்சக் கட்டுப்பாட்டு மையமாக மத்திய கதம் அல்-அன்பியா தலைமையகம் செயல்படுகிறது.
இந்தத் தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், “மோதல் அதிகரிக்கும் சூழலில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தளபதிகள், அதிகாரிகளின் வீடுகளை தாக்குவோம்” என்று எச்சரித்துள்ளார்.
மேலும், “டிரம்ப் தொடர்ந்து மிரட்டல் விடுத்தபடி, அமெரிக்க படைகளை போர் முனையில் இருந்து விலக்கி, மக்கள் நெரிசல் மிகுந்த பகுதிகளிலும், பொருளாதார மையங்களிலும் ஒளித்து வைத்துக் கொள்கிறார்” என்று ஈரானிய ஊடகங்களை மேற்கோள் காட்டி குற்றம்சாட்டினார்.
ஈரானின் அறிக்கை மேலும் எச்சரித்துள்ளது: “டிரம்ப் தரைவழி தாக்குதல் நடத்தினால், பாரசீக வளைகுடாவில் உள்ள சுறாக்களுக்கு அமெரிக்க தளபதிகளும் வீரர்களும் இரையாவார்கள்.”
இதற்கிடையில், ஈரானின் பல்கலைக்கழகங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பல்கலைக்கழகங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் ஏற்கனவே எச்சரித்திருந்தது. இன்று மீண்டும் அமெரிக்கா-இஸ்ரேல் தளபதிகள் மற்றும் அதிகாரிகளின் வீடுகளை தாக்குவோம் என்று கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேற்காசியாவில் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இரு தரப்பும் ஒருவருக்கொருவர் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்து வருகின்றன. அமைதிப் பேச்சு முயற்சிகள் தொடர்ந்தாலும், போர் அபாயம் இன்னும் முழுமையாக அகன்றபாடில்லை.
இதையும் படிங்க: 4,000 கி.மீ தாண்டி தாக்குதல்! அமெரிக்காவுக்கு ஈரான் அதிர்ச்சி வைத்தியம்! டியாகோ கார்சியா கடற்படை தளம் நொறுங்கியது!