சீனாவை நம்பினா இப்பிடிதான்? ஈரானுக்கு பலத்த அடி விழ காரணம்?! ஏர் டிபென்ஸ் சிஸ்டம் பெயிலியர்?!!
சீனாவின் HQ-9B ஏர் டிபென்ஸ் சிஸ்டத்தின் திறன் குறித்து சர்வதேச ராணுவ வட்டாரங்களில் கேள்விகள் எழுந்துள்ளன.
கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 28, 2026) முதல் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது பெரும் வான்வழி தாக்குதலைத் தொடங்கின. போர் விமானங்கள் மூலம் குண்டு மழை பொழிந்தன.
குறிப்பாக டெஹ்ரானுக்குள் நுழைந்து உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மாளிகை, உயர் அதிகாரிகளின் வீடுகள், அலுவலகங்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தின. இதில் கமேனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார். பல உயர் ராணுவ அதிகாரிகளும் உயிரிழந்தனர். இது ஈரானுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கோபமடைந்த ஈரான் உடனடியாக பதிலடி கொடுத்தது. அதிநவீன பாலிஸ்டிக் ஏவுகணைகளை இஸ்ரேல் மீது செலுத்தியது. ஆனால் இஸ்ரேலின் அயர்ன் டோம் (Iron Dome), டேவிட்ஸ் ஸ்லிங் (David's Sling) போன்ற பல அடுக்கு வான் பாதுகாப்பு அமைப்புகள் சிறப்பாக செயல்பட்டன.
ஈரான் அனுப்பிய பெரும்பாலான ஏவுகணைகளை இடைமறித்து சுட்டு வீழ்த்தின. சில ஏவுகணைகள் மட்டுமே இஸ்ரேலுக்குள் நுழைந்து சிறு சேதத்தை ஏற்படுத்தின. இஸ்ரேலின் ஏர் டிஃபென்ஸ் சிஸ்டம் போரில் எதிரியை தாக்குவது மட்டுமல்ல, தன்னை பாதுகாப்பதிலும் மிக முக்கியம் என்பதை நிரூபித்தது.
இதையும் படிங்க: ஈரான் உச்ச தலைவர் கமேனி கதை முடித்தது எப்படி? ஒவ்வொரு அசைவையும் உற்று நோக்கிய சிஐஏ!! பக்கா ஸ்கெட்ச்!
ஈரானிடம் சீனாவில் தயாரிக்கப்பட்ட HQ-9B ஏர் டிஃபென்ஸ் சிஸ்டம் உள்ளது. இது 300 கி.மீ தூரம் வரை தாக்கும் திறன், 50 கி.மீ உயரம் வரை இலக்குகளை இடைமறிக்கும் என சீனா கூறியது.
ஆனால் அமெரிக்கா-இஸ்ரேல் போர் விமானங்கள் (எப்-35 ஸ்டெல்த் உள்ளிட்டவை) ஈரானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியபோது HQ-9B அமைப்புகள் பெரிதும் பயன்படவில்லை. பல இலக்குகள் அழிக்கப்பட்டன. இதனால் ஈரானுக்கு பாதிப்பு அதிகமானது.
இதே HQ-9B சிஸ்டம் நமது அண்டை நாடு பாகிஸ்தானிடமும் உள்ளது. கடந்த ஆண்டு (2025) நடந்த ஆபரேஷன் சிந்தூரின் போது இந்தியா பாகிஸ்தானுக்குள் நுழைந்து துல்லிய தாக்குதல் நடத்தியது. அப்போது பாகிஸ்தான் பெரிதும் நம்பியிருந்த HQ-9B அமைப்பால் இந்திய போர் விமானங்கள், பிரம்மோஸ் ஏவுகணைகளை தடுக்க முடியவில்லை. பல இலக்குகள் அழிக்கப்பட்டன.
இரு சம்பவங்களும் சீனாவின் HQ-9B ஏர் டிஃபென்ஸ் சிஸ்டத்தின் திறன் குறித்து சர்வதேச ராணுவ வட்டாரங்களில் பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளன. ஸ்டெல்த் தொழில்நுட்பம், எலக்ட்ரானிக் வார்ஃபேர், துல்லிய தாக்குதல்களுக்கு எதிராக இது பலவீனமாக உள்ளதா என விவாதங்கள் எழுந்துள்ளன.
இஸ்ரேலின் அயர்ன் டோம் போன்ற அமைப்புகள் உலக அளவில் மேம்பட்டவை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. மேற்காசிய போர் தொடர்ந்தால் பிராந்திய அமைதி, இந்தியர்களின் பாதுகாப்பு பெரும் சவாலாக உள்ளது. விரைவில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதையும் படிங்க: மும்பை தாக்குதல் பாணி?! இந்தியாவுக்கு எதிராக மீண்டும் சதித்திட்டம்?! வீடியோ வெளியிட்டு மிரட்டும் லஷ்கர் - இ - தொய்பா!!