×
 

அலி கமேனி மறைவு: இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள பிரதமர் மோடிக்கு ஈரான் அழைப்பு..!!

கமேனியின் மறைவைத் தொடர்ந்து அவரது மகன் மொஜ்தபா கமேனி ஈரானின் தற்போதைய உச்சத் தலைவராக உள்ளார்.

ஈரானின் முன்னாள் உச்சத் தலைவரும், நாட்டின் அரசியல் மற்றும் மதத் தலைமையின் முக்கிய முகமாக விளங்கிய அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பு, இந்தியா–ஈரான் உறவுகளின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

அயதுல்லா அலி கமேனி கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்டதாக கூறப்படும் தாக்குதலில் உயிரிழந்தார். அவரது மறைவு மத்திய கிழக்கு அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதுடன், பல்வேறு நாடுகளின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்திருந்தனர்.

முதலில் கமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகளை மார்ச் மாதத்திலேயே நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வந்த போர் சூழல் மற்றும் பாதுகாப்பு சவால்கள் காரணமாக அந்த நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. தற்போது நிலைமை ஓரளவு சீரடைந்ததைத் தொடர்ந்து, ஜூலை 4 முதல் 9ஆம் தேதி வரை அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நிகழ்வுகளை நடத்த ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.

இதையும் படிங்க: மாறும் உலக சூழலில் பிரிக்ஸ் அமைப்பிற்கு அசாத்திய பங்கு உண்டு! தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி உரை!

நிகழ்வுகளின் முதல் நாளான ஜூலை 4ஆம் தேதி, தலைநகர் தெஹ்ரானில் உள்ள கிராண்ட் மொசல்லா வளாகத்தில் கமேனியின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் உலக நாடுகளின் பிரதிநிதிகள் அஞ்சலி செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து தெஹ்ரான் மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்த கோம் நகரங்களில் அரசு மரியாதையுடன் பொதுஊர்வலங்கள் நடைபெற உள்ளன. மேலும், ஷியா இஸ்லாமியர்களின் புனித மையங்களாகக் கருதப்படும் ஈராகின் நஜாஃப் மற்றும் கர்பலா நகரங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.

இறுதியாக ஜூலை 9ஆம் தேதி, கமேனியின் சொந்த ஊரான மஷ்ஹத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற இமாம் ரெஸா தர்காவில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இந்த இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள், தூதர்கள் மற்றும் மதத் தலைவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

இதையும் படிங்க: நாட்டின் ஒருமைப்பாட்டிற்காக தன்னுயிர் ஈந்த உன்னத தலைவர்..!! டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜிக்கு பிரதமர் மோடி புகழாரம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share