×
 

#BREAKING விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பா? - நாகை எஸ்.பி. பகிர்ந்த பரபரப்பு தகவல்...!

விஜய் பிரசாரத்திற்கு நாகையில் அனுமதி மறுக்கப்பட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என நாகை எஸ்பி செல்வக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

த.வெ.க தலைவர் விஜய்யின் முதல் பிரச்சாரம் இன்று திருச்சியில் தொடங்கியுள்ளது. ஒட்டுமொத்த திருச்சியையே ஸ்தம்பிக்க வைக்கும் அளவிற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் விமான நிலையம் முதல் மரக்கடை வரை குவிந்துள்ளனர். அதுமட்டுமின்றி வீட்டு சுவர்கள், மரக்கிளைகள், கம்பி வேலிகள் என கண்ட இடங்கள் மீதும் ஏறி நின்று விஜயைக் காண ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

மேலும் போலீசாரின் கட்டுப்பாடுகளை மீறி, விஜய் வாகனத்தைத் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் சாரை சாரையாய் அணிவகுந்து செல்கின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு, வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி விட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

 திருச்சியில் பிரச்சாரம் நடந்த விஜய் தரப்பிற்கு போலீசார் 23 நிபந்தனைகளை விதித்திருந்த நிலையில், பெரும்பாலான கட்டுப்பாடுகளை அவரது தொண்டர்கள் தும்சம் செய்துள்ளனர். இதனிடையே நாகையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரச்சாரத்தில் ஈடுபட காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. 

இதையும் படிங்க: #BREAKING விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு... தவெகவிற்கு எதிராக காய் நகர்த்த ஆரம்பித்த திமுக...!

நாகை அவுரித்திடலில் அதேநாளில் திமுக கூட்டம் நடைபெறவுள்ளதாக கூறி விஜய் பிரச்சாரம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், அவுரித்திடலில் கூட்டம் நடத்துவதற்காக எற்கனவே நகராட்சி அலுவலகத்தில் திமுகவினர் புக்கிங் செய்துள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் உண்மையில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்படவில்லை என காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

விஜய் பிரசாரத்திற்கு நாகையில் அனுமதி மறுக்கப்பட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என நாகை எஸ்பி செல்வக்குமார் விளக்கம் அளித்துள்ளார். வருகின்ற 20 ஆம் தேதி பிரசாரம் மேற்கொள்ள தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நாகை வருகைத்தர உள்ளார். அன்றைய தினம் அவுரித்திடல், அபிராமி சன்னதி வாசல், புத்தூர் ரவுண்டானா, காடாம்பாடி ஐடிஐ வளாகம் உள்ளிட்ட 7 இடங்களில் பிரச்சாரம் செய்ய அனுமதி கோரி அக்கட்சியின் மாவட்ட செயலாளரான சுகுமாரன் மனு அளித்துள்ளார். 

அவர்களுடைய மனு பரிசீலனையில் உள்ளது அனுமதி தரவில்லை என்ற தகவல் தவறானது.  போக்குவரத்து பாதிப்பு, பொதுமக்கள் பாதிப்பு இவைகளை ஆய்வு செய்து அனுமதி வழங்கப்படும் என எஸ்.பி. செல்வக்குமார் தெரிவித்துள்ளார். 
 

இதையும் படிங்க: ஆரம்பமே இப்படியா? - பெண் தொண்டர்களுக்கு ஏற்பட்ட நிலையால் அதிர்ச்சியில் விஜய்... தவெக பரப்புரையில் பரபரப்பு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share