இஸ்ரேலில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு! 20 ஆண்டு பிரதமர் நெதன்யாகு பின்னடைவு!
120 இடங்கள் கொண்ட க்னெசெட்டில் எந்தத் தரப்பும் தெளிவான பெரும்பான்மையைப் பெறாத நிலையில் அரசாங்க அமைப்புக்கான பேச்சுவார்த்தைகள் நீடிக்க வாய்ப்புள்ளது.
ஜெருசலேம்: 2023ஆம் ஆண்டு இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலில் பிரதமர் பதவிக்கான பொதுத்தேர்தல் நடைபெற்றது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிக ஓட்டுகள் பதிவாகியுள்ளன. இது கடந்த இருபது ஆண்டுகளில் மிக உயர்ந்த வாக்காளர் பங்கேற்பாகக் குறிப்பிடப்படுகிறது.
இருபது ஆண்டுகளாக பிரதமராக இருந்து வரும் பெஞ்சமின் நெதன்யாகு மிக நீண்ட காலம் அந்தப் பதவியில் இருப்பவர் என்ற பெருமையைப் பெற்றார். ஹமாஸ் மற்றும் ஈரான் உள்ளிட்ட எதிரிகளை எதிர்த்துப் போராடுவதாக உறுதியளித்து அவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். பாதுகாப்பு மற்றும் தேசிய நலன் தொடர்பான வாக்குறுதிகளுடன் அவர் தனது ஆதரவாளர்களை அணிதிரட்டினார்.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு மற்றும் எக்ஸிட் போல்களில் பிரதமர் நெதன்யாகுவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ராணுவத் தலைவரான காடி ஐசென்காட் தலைமையிலான கூட்டணி நெதன்யாகுவின் கூட்டணி கட்சிகளை விட சிறிய அளவிலான முன்னிலை பெற்றுள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் ஆட்சி, அரியணையில் அமர்வாரா நெதன்யாகு? பரபரப்பான இஸ்ரேல் தேர்தல்? எதிர்க்கட்சிகள் முன்னிலை?!
கருத்துக்கணிப்பின்படி எதிர்க்கட்சிக் கூட்டணி 52 முதல் 53 இடங்களையும் நெதன்யாகுவின் கூட்டணி சுமார் 50 இடங்களையும் பெறக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும் 25 இடங்களுடன் நெதன்யாகுவின் லிக்குட் கட்சியே பாராளுமன்றத்தில் தனிப்பெரும் கட்சியாக இருக்கும் எனத் தெரிய வந்துள்ளது. 120 இடங்கள் கொண்ட க்னெசெட்டில் எந்தத் தரப்பும் தெளிவான பெரும்பான்மையைப் பெறாத நிலையில் அரசாங்க அமைப்புக்கான பேச்சுவார்த்தைகள் நீடிக்க வாய்ப்புள்ளது. இறுதி முடிவுகள் வர சில நாட்கள் ஆகலாம் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தேர்தல் 2023 அக்டோபர் 7 தாக்குதலுக்குப் பிறகு நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலாகும். வாக்காளர் பங்கேற்பு அதிகமாக இருந்ததால் முடிவுகள் குறித்த ஆர்வம் அதிகரித்துள்ளது.
இரு தரப்புத் தலைவர்களும் தங்கள் நிலைப்பாடுகளை விளக்கி வருகின்றனர். நெதன்யாகு தனது கூட்டணியை வலுப்படுத்த முயற்சிப்பதாகவும் ஐசென்காட் மாற்றத்தை வலியுறுத்துவதாகவும் செய்திகள் வெளியாகின்றன. பாராளுமன்றக் கணக்கீடுகள் மற்றும் சிறிய கட்சிகளின் ஆதரவு அடுத்த கட்ட அரசியலைத் தீர்மானிக்கும்.
இதையும் படிங்க: மீண்டும் ஆட்சி, அரியணையில் அமர்வாரா நெதன்யாகு? பரபரப்பான இஸ்ரேல் தேர்தல்? எதிர்க்கட்சிகள் முன்னிலை?!