ட்ரம்ப்பின் போர் நிறுத்த திட்டம்! எகிப்தில் இஸ்ரேல் -ஹமாஸ் பேச்சுவார்த்தை! காசா எதிர்ப்பார்ப்பு!
எகிப்தில் இஸ்ரேல்-ஹமாஸ் பேச்சு டொனால்ட் டிரம்ப் முன்வைத்துள்ள 20 அம்ச திட்டம் குறித்த பேச்சுவாா்த்தையை இஸ்ரேல், ஹமாஸ் பிரதிநிதிகள் எகிப்தில் பேச்சு வார்த்தையை தொடங்கினா்.
இரண்டு ஆண்டுகளாக தொடரும் காசா போரை முடிவுக்கு கொண்டு வர, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்வைத்த 20 அம்ச அமைதித் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பிரதிநிதிகள் திங்கள்கிழமை (அக்டோபர் 6) எகிப்தின் சிவப்பு கடலோர நகரமான சரம் எல்-ஷேக் இல் மறைமுக பேச்சுவார்த்தையைத் தொடங்கினர்.
அமெரிக்கா, கத்தார், எகிப்து ஆகியவற்றின் மத்தியஸ்தத்துடன் நடைபெறும் இந்தப் பேச்சு, போரை நிறுத்தி, எஞ்சியுள்ள 48 இஸ்ரேல் பிணைக்கைதிகளை (அதில் 20 பேர் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது) விடுவிக்கும் முதல் கட்டமாக எதிர்பார்க்கப்படுகிறது. இது, 2023 அக்டோபர் 7 ஹமாஸ் தாக்குதலின் இரண்டாவது ஆண்டு நினைவு நாளுக்கு முன்னராக நடைபெறுவதால், சர்வதேச அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
டிரம்பின் 20 அம்ச திட்டம், போரை உடனடியாக நிறுத்துவது, 72 மணி நேரத்துக்குள் அனைத்து பிணைக்கைதிகளை விடுவிப்பது, அதற்கு பதிலாக இஸ்ரேல் சிறைகளில் உள்ள பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்வது, இஸ்ரேல் படைகளின் படிப்படியான வெளியேற்றம்,
ஹமாஸ் போராளிகளுக்கு பொதுமன்னிப்பு, காசாவுக்கு முழு நிவாரண உதவிகள் (நீர், மின்சாரம், மருத்துவமனைகள் மீளமைப்பு), டிரம்ப் தலைமையிலான சர்வதேச குழுவின் மேற்பார்வையில் பாலஸ்தீன இடைக்கால நிர்வாகம் (ஹமாஸ் பங்கேற்காமல்), காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிக்காத உறுதி, பாலஸ்தீன தேசம் அமைக்கும் வாய்ப்பு உள்ளிட்டவற்றை உள்ளடக்கியது.
இதையும் படிங்க: முடிந்தது கெடு! வருமா போர் நிறுத்தம்?! ஹமாஸ் அமைப்பினருடன் இஸ்ரேல் இன்று பேச்சுவார்த்தை!
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடந்த மாதம் ஐ.நா. பொதுச் சபைக்குச் சென்றபோது வெள்ளை மாளிகையில் டிரம்பை சந்தித்து இத்திட்டத்தை ஏற்றுக்கொண்டார். ஹமாஸ் சில அம்சங்களை ஏற்பதாகவும், மற்றவற்றைப் பரிசீலிப்பதாகக் கூறியது.
இந்தப் பேச்சுக்கு முன்னதாக, டிரம்ப் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 3) "ஞாயிற்றுக்கிழமைக்குள் (அக்டோபர் 5) ஒப்பந்தம் ஏற்காவிட்டால், ஹமாஸ் 'முழுமையான அழிப்பு'யை சந்திக்கும்; பெரும் ரத்த களறி ஏற்படும்" என எச்சரித்தார். அதே நாளில் சர்வதேச சிவச் செஞ்சிலுவை சங்கம், பிணைக்கைதிகள் விடுதலைக்கு உதவத் தயாராக இருப்பதாக அறிவித்தது.
சனிக்கிழமை (அக்டோபர் 4) ஹமாஸ், பிணைக்கைதிகள் விடுதலைக்கு சம்மதம் தெரிவித்தது. இதற்குப் பின், டிரம்ப் இஸ்ரேலை "காசா குண்டுவீச்சை உடனடியாக நிறுத்த" உத்தரவிட்டார். இஸ்ரேல் தனது தாக்குதல்களை குறைத்தாலும், முழுமையாக நிறுத்தவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் 21 பேர் உயிரிழந்ததுடன், போர் தொடக்கத்திலிருந்து காசாவில் 67,160 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; 169,679 பேர் காயமடைந்துள்ளனர்.
அமைதி பேச்சில் இஸ்ரேல் தரப்பை உள்நாட்டு அமைச்சர் ரான் டெர்மர் தலைமை செய்கிறார். ஹமாஸ் தரப்பை கலீல் அல்-ஹய்யா (கடந்த மாதம் இஸ்ரேல் தாக்குதலில் தப்பியவர்) வழிநடத்துகிறார். அமெரிக்காவின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்கோப், டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் அமெரிக்க குழுவை தலைமை செய்கின்றனர்.
எகிப்து வெளியுறவுத்துறை அமைச்சகம், "பிணைக்கைதிகள் பரிமாற்றத்துக்கான மனிதாபிமான ஏற்பாடுகள், போர் நிறுத்தம், காசா மீளமைப்பு ஆகியவற்றை விவாதிப்போம்" எனத் தெரிவித்துள்ளது. டிரம்ப், "முதல் கட்டம் இந்த வாரத்துக்குள் முடியும்; இது நிலையான அமைதிக்கு வழிவகுக்கும்" என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
முந்தைய முயற்சிகள் தோல்வியடைந்தாலும், டிரம்பின் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு முதல் முறையாக பேச்சுவார்த்தை நடைபெறுவதால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹமாஸ், இஸ்லாமிய ஜிஹாத் உள்ளிட்ட பிற பிரிவுகளின் ஒப்புதல் தேவைப்படும் எனக் கூறியுள்ளது.
இஸ்ரேல், "காசாவில் ஹமாஸ் இல்லாத நிர்வாகம்" அமைக்க விரும்புகிறது. போர், காசாவில் 2 மில்லியன் மக்களை பஞ்சத்திற்கு அருகில் தள்ளியுள்ளது. இந்தப் பேச்சு வெற்றி பெற வேண்டும் என சர்வதேச சமூகம் நம்புகிறது.
இதையும் படிங்க: சொன்னதை செய்து காட்டிய ட்ரம்ப்! மனம் திறந்து பாராட்டிய மோடி! காசாவில் அமைதி!