×
 

“எங்கள சீண்டுனா இதுதான் கதி”... இறங்கி அடிக்கும் இஸ்ரேல்... ஈரானை அடுத்து லெபனான் மீது கொடூர தாக்குதல்...!

இஸ்ரேl இராணுவம் தலைநகர் லெபனானின் தலைநகரான பெய்ரூட் உட்பட பல்வேறு நகரங்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளது. 

ஈரானிய உச்ச தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக ஹெஸ்பொல்லா இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசியதை தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இஸ்ரேலிய இராணுவம் தலைநகர் லெபனானின் தலைநகரான பெய்ரூட் உட்பட பல்வேறு நகரங்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளது. 

லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹெஸ்பொல்லா  அமைப்பின் தளங்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்த இஸ்ரேல் தயாராகி வருகிறது. இதற்காக, 50 கிராமங்களைச் சேர்ந்த மக்களை உடனடியாக வெளியேறுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல் தலைநகர் பெய்ரூட்டை ஏவுகணைகளால் தாக்கியது. இந்த தாக்குதலில் பல கட்டிடங்கள் சேதமடைந்தன.  ஒரு வீடு தீப்பிடித்தது. 

ஈரானின் உச்ச தலைவர் கமேனியின் மரணத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஹெஸ்பொல்லா அமைப்பு இஸ்ரேலிய எல்லையை நோக்கி ஏவுகணைகளை ஏவியது. இதனால் இஸ்ரேல் லெபனான் மீது பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலிய இராணுவம் தனது வான்வெளியில் நுழைந்த ஏவுகணையை சுட்டு வீழ்த்தியதாகக் தெரிவித்துள்ளது. ஈரானுக்கு ஆதரவாக இஸ்ரேலைத் தாக்க வேண்டாம் என்று லெபனான் அரசு அதிகாரிகள் ஹெஸ்பொல்லா அமைப்பைக் கேட்டுக் கொண்டுள்ளனர். 2024 ஆம் ஆண்டு இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இருந்து லெபனான் இன்னும் மீளாத நிலையில், மீண்டும் தாக்குதல்களை சந்தித்து வருவது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: பயங்கர திருப்பம்.. கமேனிக்காக போரில் குதித்த பவர்ஃபுல்லான நாடு... உச்சக்கட்ட போர் பதற்றம்...!!

ஆயத்துல்லா இமாம் சையத் அலி அல்-ஹுசைனி கமேனியின் தூய இரத்தத்திற்குப் பழிவாங்கும் விதமாகவும், லெபனான் மற்றும் அதன் மக்களைப் பாதுகாப்பதற்காகவும், மீண்டும் மீண்டும் இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும் ராக்கெட்டுகள் மற்றும் ட்ரோன்களை வீசியதாக லெபனான் போராளிக் குழுவான ஹெஸ்பொல்லா பொறுப்பேற்றுள்ளது.

இரு தரப்பினருக்கும் இடையே ஒரு வருட கால போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் நவம்பர் 2024 போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு இஸ்ரேல் மீது ஹெஸ்பொல்லா நடத்திய முதல் தாக்குதல் இதுவாகும். அதன் பின்னர் இஸ்ரேல் லெபனான் மீது வழக்கமான தாக்குதல்களை நடத்தியது. 

லெபனானின் அரசு நடத்தும் தேசிய செய்தி நிறுவனம் (NNA), ஹெஸ்பொல்லா ஆதிக்கம் செலுத்தும் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் தொடங்கி, லெபனான் முழுவதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது. பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளிலிருந்தும் நாட்டின் தெற்கிலிருந்தும் குடியிருப்பாளர்கள் பெரும் அளவில் வெளியேறியதாக கூறப்படுகிறது. பெய்ரூட்டிலும், தெற்கு லெபனானிலும் சில ஹெஸ்புல்லா அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. 

இஸ்ரேல் மீதான தாக்குதல்கள் பொறுப்பற்றவை மற்றும் சந்தேகத்திற்குரியவை என்று லெபனான் பிரதமர் நவாஃப் சலாம் சாடியுள்ளார். ஹெஸ்பொல்லாவின் பெயரைக் குறிப்பிடாமல், தனது அரசாங்கம் "குற்றவாளிகளைத் தடுத்து லெபனான் மக்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்" என எச்சரித்துள்ளார். 
 

இதையும் படிங்க: உலகமே பேரதிர்ச்சி... ஈரான் பள்ளி மீது ஏவுகணையை இறக்கிய இஸ்ரேல்... 40 மாணவிகள் உடல் சிதறி பலி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share