போர் நிறுத்தத்திற்கு மாற்று வழியை யோசிக்கிறோம்!! ஹமாஸை ஒழிக்க திட்டம் போடும் இஸ்ரேல்..!
ஹமாஸ் உடனான போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளுக்கு மாற்று வழிகளை பரிசீலித்து வருகிறோம். என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும், பேச்சுவார்த்தைக்கு அனுப்பிய பிரதிநிதிகளை திரும்ப அழைத்துள்ளது. இதனால் போர் நிறுத்தம் ஏற்படுவது உறுதியற்ற நிலையாகவே உள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து தடுமாறி, இப்போ ஒரு புது திருப்பத்தை சந்திச்சிருக்கு. இஸ்ரேல், பேச்சுவார்த்தைகளுக்கு மாற்று வழிகளை பரிசீலிக்கறோம்னு அறிவிச்சு, கத்தாரில் நடந்த பேச்சுவார்த்தைகளுக்கு அனுப்பியிருந்த தன்னோட பிரதிநிதிகளை திரும்ப அழைச்சிருக்கு. இதனால, காசாவில் 21 மாசமா நடக்குற போருக்கு முடிவு காண முடியாம, நிலைமை இன்னும் உறுதியற்றதா இருக்கு.
இந்த முடிவு, பிணைக்கைதிகளை விடுவிக்கறதையும், காசாவில் மனிதாபிமான நிலைமைகளை மேம்படுத்தறதையும் மேலும் சிக்கலாக்கியிருக்கு.ஜூலை 25, 2025-ல், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளுக்கு மாற்று வழிகளை பரிசீலிக்கறோம்”னு அறிவிச்சார்.
இதே நேரத்துல, அமெரிக்க அதிபர் ட்ரம்போட சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப், “ஹமாஸ் பேச்சுவார்த்தைகளில் நல்லெண்ணத்தோட செயல்படலை”னு குற்றம் சாட்டி, அமெரிக்க பிரதிநிதிகளையும் கத்தாரில் இருந்து திரும்ப அழைச்சிருக்கார்.
இதையும் படிங்க: அவங்க சாக ஆசைப்படுறாங்க.. வேட்டையாடப்படுவாங்க!! போர் நிறுத்தம் தோல்வியால் கோவத்தில் ட்ரம்ப்..!
இந்த முடிவு, கத்தார், எகிப்து மத்தியஸ்தத்தோட நடந்த பேச்சுவார்த்தைகளுக்கு பெரிய பின்னடைவா பார்க்கப்படுது. ஹமாஸ் பக்கம், இந்த அறிவிப்பு தங்களை அழுத்தம் கொடுக்கறதுக்காகவேனு சொல்லி, “நாங்க நேர்மையா பேச்சுவார்த்தைக்கு தயாரா இருக்கோம்”னு பதிலடி கொடுத்திருக்கு.
இந்த பேச்சுவார்த்தைகள், 60 நாள் தற்காலிக போர் நிறுத்தத்தை ஏற்படுத்தி, ஹமாஸ் கைவசம் இருக்கற 50-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகளில் 10 பேரை உயிரோடவும், 18 பேரோட உடல்களையும் விடுவிக்கறதுக்கு முயற்சி செய்தது. இதுக்கு பதிலா, இஸ்ரேல் சிறையில் இருக்கற ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய கைதிகளை விடுவிக்கணும்னு பேசப்பட்டது.
ஆனா, இஸ்ரேல், காசாவில் ஹமாஸ் ஆயுதங்களை கீழே போடணும், அதோட தலைவர்கள் நாடு கடத்தப்படணும்னு வற்புறுத்துது. ஹமாஸோ, இஸ்ரேல் முழுமையா காசாவில் இருந்து வெளியேறி, நிரந்தர அமைதி ஒப்பந்தம் செய்யணும்னு கோருது. இந்த முரண்பாடுகளால, பேச்சுவார்த்தைகள் தோல்வியடைஞ்சு, இப்போ முறிச்சு வச்சிருக்கு.
ஜனவரி 19, 2025-ல ஒரு முதல் கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு, 33 இஸ்ரேலிய பிணைக்கைதிகளும், 5 தாய்லாந்து கைதிகளும் விடுவிக்கப்பட்டாங்க. இஸ்ரேல், 2,000 பாலஸ்தீனிய கைதிகளை விடுதலை செய்தது. ஆனா, மார்ச் 2025-ல இஸ்ரேல் திடீர் தாக்குதல்களை நடத்தி, 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதால, இந்த ஒப்பந்தம் உடைஞ்சு போச்சு.
இப்போ, இஸ்ரேல் நெட்சரிம், பிலடெல்ஃபி நடைபாதைகளை (காசாவை பிரிக்கற மற்றும் எகிப்து எல்லையை கட்டுப்படுத்தற பகுதிகள்) கட்டுப்பாட்டில் வச்சிருக்கறதும், இந்த பேச்சுவார்த்தைகளுக்கு முக்கிய தடையா இருக்கு.
காசாவில் மனிதாபிமான நிலைமை மோசமாகி, உணவு பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாட்டால் இறப்புகள் அதிகரிச்சிருக்கு. ஐநா, 1,000-க்கும் மேற்பட்டோர் உணவு தேடும்போது கொல்லப்பட்டதா சொல்லுது. இந்த நிலையில், இஸ்ரேல் உதவிகளை தடுப்பது சர்வதேச சட்டத்துக்கு எதிரானதுனு விமர்சனங்கள் எழுந்திருக்கு.
இஸ்ரேல், அமெரிக்காவோட இந்த முடிவு, ஹமாஸை அழுத்தம் கொடுக்கறதுக்காகவேனு சில இஸ்ரேலிய அதிகாரிகள் சொல்றாங்க. ஆனா, இது பேச்சுவார்த்தைகளை முற்றிலும் முடக்கிடுமோனு பயம் இருக்கு. ஹமாஸ், “நாங்க நிரந்தர அமைதிக்கு தயார்”னு சொன்னாலும்,
இஸ்ரேலோட கோரிக்கைகளை ஏற்க மறுக்குது. இந்த நிலையில், போர் நிறுத்தமும், பிணைக்கைதிகள் விடுதலையும் தொடர்ந்து உறுதியற்ற நிலையிலேயே இருக்கு, இது காசாவில் மக்களோட அவதியை மேலும் அதிகரிக்குது.
இதையும் படிங்க: பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரித்த பிரான்ஸ்.. கொதித்தெழுந்த நெதன்யாகு! முற்றுகிறது மோதல்..!