×
 

அதிபர் நெதன்யாகு அரெஸ்ட்?! தீவிரம் காட்டும் கனடா! கெஞ்சும் இஸ்ரேல்!

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீதான கைது வாரண்ட் உத்தரவு அமல்படுத்தும் முடிவை கைவிடுமாறு கனடாவை இஸ்ரேல் வலியுறுத்தி உள்ளது.

காசா போரில் போர்க்குற்றங்கள் செய்ததாக சர்வதேச தண்டனை நீதிமன்றம் (ICC) இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுக்கு கடந்த ஆண்டு கைது வாரண்ட் பிறப்பித்த நிலையில், அதை அமல்படுத்தும் கனடாவின் முடிவை கைவிடுமாறு இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

காசாவில் இஸ்ரேல் நடத்திய இரண்டு ஆண்டுகள் நீடித்த போரில், 67,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் மற்றும் பெண்கள் அடங்குவர். இந்தத் தாக்குதல்கள் போர்க்குற்றம் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் என்று ICC கருதியது. நெதன்யாகு மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கலன்ட் ஆகியோருக்கு நவம்பர் 2024-ல் கைது வாரண்ட் பிறப்பித்தது. இஸ்ரேல் இந்தத் தீர்ப்பை நிராகரித்தது. மேலும் ICC-யின் அதிகாரத்தை ஏற்கவில்லை என திட்டவட்டமாக கூறியது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தலையீட்டால் இஸ்ரேல்-காசா போர் சமீபத்தில் முடிவுக்கு வந்தது. இருப்பினும், நெதன்யாகுக்கு எதிரான கைது உத்தரவு தொடர்ந்து நடப்பில் உள்ளது. கனடா பிரதமர் மார்க் கார்னி, பிபிசி-க்கு அளித்த நேர்காணலில், "நெதன்யாகு கனடாவுக்கு வந்தால், ICC உத்தரவை அமல்படுத்தி அவரை கைது செய்வோம்" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் இதே நிலைப்பாட்டை எடுத்திருந்தார்.

இதையும் படிங்க: அந்த பக்கம் வண்டிய திருப்பாத!? அரஸ்ட் பயத்தால் அலறிய இஸ்ரேல் பிரதமர்!

இந்த முடிவுக்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இஸ்ரேல் அரசு பேச்சாளர் ஷோஷ் பெட்ரோசியன், "பிரதமர் கார்னி இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். நெதன்யாகு மத்திய கிழக்கின் ஒரே யூத நாட்டின் தலைவரும், ஜனநாயக நாட்டின் தலைவரும் ஆவார். அவரை கனடா வரவேற்க வேண்டும்" என்று கூறினார். கனடாவின் பாலஸ்தீன அங்கீகாரத்தை இஸ்ரேல் "இந்த சாசனத்திற்கான பரிசு" என்று விமர்சித்தது. இஸ்ரேல், காசா போரில் எந்த போர்க்குற்றமும் செய்யவில்லை என்று வலியுறுத்துகிறது.

ICC-யின் 124 உறுப்பு நாடுகள் அனைத்தும் இந்த வாரண்ட்டை அமல்படுத்த வேண்டும். ஐரோப்பிய நாடுகள் போன்று நெதர்லாந்து, நியூசிலாந்து, நார்வே, பெல்ஜியம் போன்றவை நெதன்யாகுவை கைது செய்ய தயார் என அறிவித்துள்ளன. ஆனால், ஹங்கேரி, ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி போன்றவை அதை செய்ய மறுக்கலாம் என்று கூறுகின்றன. கனடாவின் இந்த நிலைப்பாடு, இஸ்ரேல்-கனடா உறவில் பாதிப்பை ஏற்படுத்தலாம். பாலஸ்தீனர்கள், நெதன்யாகு தனி பாலஸ்தீன நாட்டை உருவாக்குவதில் தடையாக இருப்பதாகக் கூறுகின்றனர். 

இதையும் படிங்க: நாங்க மோதிப்போம்! நாங்களே சரி செய்வோம்! கனடா பிரதமருடன் அதிபர் ட்ரம்ப் க்ளோஸ் ப்ரண்ட்ஷிப்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share