×
 

"வாயில் நல்லா வருதாம்"..! முதல்வர் வாயில் வராத விஷயம் தெரியுமா.? ஜெயக்குமார் விளாசல்..!

முதல்வர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் பேசியதை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது, தன்னை எம்ஜிஆர் ரோடு ஒப்பிட்டுப் பேசவில்லை என்றும் எம்ஜிஆர் தான் எனவும் தெரிவித்தார். இன்னும் கொஞ்சம் அதிகமாக ஆதரித்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றும் ஆனால் வருங்காலத்தில் உங்களுடைய முழு ஆதரவை பெறுவேன் என்ற நம்பிக்கை தன் மனதில் ஆழமாக பதிந்திருப்பதாக கூறியுள்ளார். நீங்கள் அமைத்துக் கொடுத்திருக்கும் இந்த ஆட்சியில் எல்லா நன்மைகளையும் கண்கூடாக பார்த்த தான் போகிறீர்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது என்றார்.

யார் எந்த நிலைக்கு போனாலும், கிண்டலும் கேலியும் இருக்கத்தான் செய்யும் எனவும் நம்மை பற்றி நமது அரசியலைப் பற்றி கிண்டலும் கேலியுமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் தயவுசெய்து அதனை நிறுத்திக் கொள்ளாதீர்கள் நீங்கள் பேசிக் கொண்டே இருங்கள் நான் மக்களுக்கு தேவையானது செய்து கொண்டே இருப்பின் எனவும் தெரிவித்தார். கவர்ச்சியில் மக்கள் மயங்கி ஓட்டு போட்டு விட்டார்கள் என்று கூறுகிறார்கள் என்றும் நக்கல் அடித்தார். “நல்லா வருது வேணான்னு பாக்குறேன்”... என்று கூறினார்..! உண்மையை சொல்லு உடன்பிறப்பே வா என்ற திமுக கூறுகிறார்கள் என்றும்… அந்தக் காரணத்தை உங்கள் குடும்பத்திலேயே கேளுங்கள் என்று மக்கள் கூறுவதாக தெரிவித்தார். 

வாயில் நல்லா வருது என்று முதல்வர் விஜய் பேசியதை சுட்டிக்காட்டி அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்தார். அப்போது, திருச்சி கிழக்கில் தனக்கு வாக்களித்த மக்களை வரவழைத்து நன்றி சொன்ன முதல்வரின் வாயில் வராத சில விஷயங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2500 வருடத்திற்கு 6 இலவச சிலிண்டர்கள், மாதம் ஒருமுறை மின்சார அளவீடு, 5 ஏக்கர் வரை உள்ள‌ விவசாயிகளுக்கு கூட்டுறவு கடன் தள்ளுபடி மற்றும் மாவட்ட வாரியாக சிறப்பு திட்டங்கள் ஆகியவை முதலமைச்சர் விஜயின் வாயிலிருந்து வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: புது கட்சி தொடங்கிய அண்ணாமலை..! பாஜகவுக்கு பாதிப்பா..? நயினார் நச் விளக்கம்..!

முதல்வரான பின்பும் எதிர் கட்சிகளை எதிரிகளாக சித்தரித்து சினிமா அரசியல் செய்யும் முதல்வரே, திருச்சி வரை சென்று வீர வசனம் பேசியதற்கு பதிலாக தாங்கள் அளித்த பல்வேறு வாக்குறுதிகளில் ஒருசிலதாவது “வாயில வந்திருந்தா நல்லாருந்துருக்கும்” என்றும் கூறினார். 

இதையும் படிங்க: புதிய அரசியல் முகமூடியா..? அண்ணாமலை புதிய கட்சி..! சந்தேகத்தை கிளப்பிய MP மாணிக்கம் தாகூர்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share