166 கி.மீ வேகத்தில் நெருங்கும் புயல்... லட்சக்கணக்கில் மக்கள் வெளியேற்றம்... வானிலை மையம் பகீர் வார்னிங்..!
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐந்து கடலோர மாகாணங்களைச் சேர்ந்த 3,25,500 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
தென் சீனக் கடலை நோக்கி நீண்ட கடற்கரையைக் கொண்டுள்ள வியட்நாம், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான புயல்களால் அடிக்கடி தாக்கப்படுகிறது. இந்த ஆண்டு மிக மிக ஆபத்தான காஜிகி புயல் வியட்நாமை தாக்கியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமையே காஜிகி புயல் மணிக்கு 166 கிலோமீட்டர் வேகத்தில் நாட்டின் மத்திய கடற்கரையை நோக்கி நகர்ந்து வருவதாக வியட்நாம் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. "இது மிகவும் ஆபத்தான மற்றும் வேகமாக நகரும் புயல்" என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் கடந்த ஆண்டு 300 பேரைக் கொன்று $3.3 பில்லியன் சொத்து சேதத்தை ஏற்படுத்திய யாகி சூறாவளியைப் போலவே காஜிகி சூறாவளியும் சக்திவாய்ந்ததாக இருக்கலாம் என்று வியட்நாம் அரசாங்கம் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐந்து கடலோர மாகாணங்களைச் சேர்ந்த 3,25,500 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதோடு, ஹோவா மற்றும் குவாங் பின் மாகாணங்களில் உள்ள இரண்டு விமான நிலையங்கள் மூடப்பட்டன. வியட்நாம் ஏர்லைன்ஸ் மற்றும் வியட்ஜெட் உள்ளிட்ட டஜன் கணக்கான விமானங்களை ரத்து செய்யப்பட்டன.
இதையும் படிங்க: மதுரையில் திமுக... திண்டுக்கல்லில் அதிமுக... புயலை கிளப்பும் மாநகராட்சி ஊழல்கள்...!
நேற்று பிற்பகல் 1 மணி அளவில் வியட்நாமை கடந்து சென்ற காஜிகி புயலால் கனமழை, திடீர் வெள்ளம், நிலச்சரிவு போன்ற அசம்பாவிதங்கள் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மேட்டூர் அனல் மின் நிலையத்தில் ஊழல்... தமிழ்நாடு மின் உற்பத்தி கழகத்திற்கு ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!