×
 

ரஷ்யாவில் தரமான சம்பவம்.. பாக்., முகத்திரையை டார் டாராக கிழித்த கனிமொழி..!

பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் தொடர் நடவடிக்கைகள், சமீபத்தில் நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்துார், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தான் ஆகியவை குறித்து நம் எம்பிக்கள், ரஷ்ய பிரதிநிதிகளிடம் விளக்கினர்.

காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமை இடமாக கொண்டு செயல்படும் லக்‌ஷர் இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் (The Resistance Front - TRF) என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா அழித்தது. இதனை அடுத்து ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம் இந்திய விமானப் படை, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசி அழித்தது. 

பயங்கரவாதத்திற்கு எதிரான இந்திய படைகளின் ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கையை, உலக நாடுகள் மத்தியில் பாகிஸ்தான் திரித்து பரப்பும் முயற்சியில் ஈடுபட்டது. இந்தியாவிற்கு நெருக்கமான, உலக அரங்கில் வலியாமையாக உள்ள 33 நாடுகளிடம் பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைக்க, அனைத்து கட்சி எம்பிக்கள் குழு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. அந்த வகையில், திமுக எம்பி கனிமொழி தலைமையிலான அனைத்து கட்சி எம்பிக்கள் குழு இன்று ரஷ்யா சென்றடைந்தது. மாஸ்கோவில் ரஷ்ய அதிகாரிகள் நம் எம்பிக்களை உற்சாகத்துடன் வரவேற்றனர். 

இதையும் படிங்க: மோடியின் அடுத்த அஸ்திரம்..! 7 கட்சி எம்பி.க்கள் குழுவில் சசிதரூர், கனிமொழிக்கு இடம்..!

நம் எம்பிக்களை வரவேற்ற ரஷ்யா வெளியுறவு துறை அதிகாரி லியோனிட் ஸ்லட்ஸ்கி, இரு தரப்பு பிரதிநிதிகள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். கனிமொழியுடன் சமாஜ்வாதி எம்பி ராஜீவ் ராய், பாஜ எம்பி கேப்டன் பிரிஜேஷ், ராஷ்டிரிய ஜனதாதளம் எம்பி பிரேம் சந்த் குப்தா, ஆம் ஆத்மி எம்பி அசோக் குமார் மிட்டல், முன்னாள் துாதர அதிகாரி மஞ்ஜீவ் சிங் பூரி ஆகியோரும் இரு தரப்பு பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். ரஷ்யா தரப்பில் அந்நாட்டு வெளியுறவு துறை துணை தலைவர் ஆன்ட்ரே டெனிசோவ் மற்றும் பிற செனட் உறுப்பினர்கள்  இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். 

ரஷ்யாவுக்கான இந்திய துாதர் வினய் குமார், இந்திய எம்பிக்களின் வருகை, அதற்கான நோ்கம் குறித்து ரஷ்ய அதிகாரிகளிடம் விளக்கினார். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் தொடர் நடவடிக்கைகள், சமீபத்தில் நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்துார், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தான் ஆகியவை குறித்து நம் எம்பிக்கள், ரஷ்ய பிரதிநிதிகளிடம் விளக்கினர். 

பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைக்கு ஏற்கனவே ஆதரவு தெரிவித்துள்ள ரஷ்யா, தற்பாேதைய எம்பிக்கள் அளித்த விளக்கத்தால், நம் செயல்பாடுகளையும், பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு நிலைப்பாட்டையும் நன்கு புரிந்து கொள்ள வாய்ப்புள்ளதாக நம் துாதரக அதிகாரிகள் கூறினர். ரஷ்ய பணயத்தை முடித்த பின், கனிமொழி தலைமையிலான நம் எம்பிக்கள் குழுவினர் அங்கிருந்து ஸ்லோவேனியா, கிரீஸ், லாட்வியா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு செல்ல உள்ளனர்.

இதையும் படிங்க: “அவர் பெரியார் வழியில் வந்தவனாக இருக்க முடியாது” - சொந்த கட்சிக்காரர்களையே வெளுத்து வாங்கிய கனிமொழி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share