கரூர் கோரச்சம்பவம்… 41 பேருக்கு இரங்கல் தெரிவித்து தவெக பொதுக்குழுவில் தீர்மானம்…!
கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேருக்கும் இரங்கல் தெரிவித்து தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக வெற்றி கழகத்தின் சிறப்பு பொதுக்கூட்டம் மாமல்லபுரத்தில் தொடங்கியது. 40 நாட்களுக்குப் பின்னர் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் விஜய் கலந்து கொள்கிறார். கரூர் கோரச்சம்பவம் நிகழ்ந்த பிறகு விஜய் பங்கேற்கும் முதல் கூட்டம் இது. இந்த கூட்டத்தில், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் பொது குழுவில் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கரூர் மாவட்ட செயலாளர் இந்த முதல் தீர்மானத்தை வாசித்தார். மேடையில் ஏறிய கரூர் மாவட்ட செயலாளர் மதியழகனை ஆரத்தழுவி விஜய் வரவேற்றார். கரூர் சம்பவம் நிகழ்ந்த உடன் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டு தொடர்ந்து விசாரணைக்கு ஆளாகப்பட்டவர் இந்த மதியழகன். பல்வேறு சிக்கல்களுக்கு ஆளான மதியழகன் நீதிமன்ற காவலுக்கு பிறகு ஜாமினில் வெளிவந்தார்.
இதனைத் தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்யப்படுவதை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கோவை விவகாரத்தில் திமுக அரசிற்கு கண்டனம் தெரிவித்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்றும் தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மீண்டெழுந்த தவெக... கூடியது பொதுக்குழு கூட்டம்... புதுதெம்பில் விஜய் பங்கேற்பு...!
இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்வதை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் கைது விவகாரத்தில் கடிதம் மட்டுமே எழுதிவிட்டு அமைதியாக இருக்கும் திமுக அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி தீர்மானம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மழையில் நனையும் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாத திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையும் படிங்க: மொத்த பவரையும் கையில் எடுக்கும் விஜய்... தவெக பொதுக்குழுவில் நிறைவேறப் போகும் ஸ்பெஷல் தீர்மானம்...!