#BREAKING அரச குடும்பத்தில் பிளவு: பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரூவின் பட்டம் பறிப்பு... அரண்மனையில் இருந்து வெளியேறவும் உத்தரவு...!
பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான அவரது உறவை எதிர்த்து நடவடிக்கை எடுக்க பல வாரங்களாக அழுத்தம் கொடுத்ததை அடுத்து, பக்கிங்ஹாம் அரண்மனை இப்படியொரு முடிவெடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரிட்டனின் மன்னர் சார்லஸ் , தனது தம்பி இளவரசர் ஆண்ட்ரூவின் மீதமுள்ள அனைத்து பட்டங்கள் மற்றும் ராயல் விருதுகளை பறித்தோடு, அவரை பிரிட்டன் அரண்மனையான விண்டசரில் இருந்து வெளியேற உத்தரவிட்டுள்ளார். பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான அவரது உறவை எதிர்த்து நடவடிக்கை எடுக்க பல வாரங்களாக அழுத்தம் கொடுத்ததை அடுத்து, பக்கிங்ஹாம் அரண்மனை இப்படியொரு முடிவெடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் பின்னர் ஆண்ட்ரூ இளவரசராக அல்ல, ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சர் என்று அழைக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலியல் குற்றச்சாட்டு:
அமெரிக்காவைச் சேர்ந்த அமெரிக்காவைச் சேர்ந்த வர்ஜீனியா கியூப்ரே என்பவர் 16 வயதிலிருந்தே ஜெஃப்ரி எப்ஸ்டீனால் பாலியல் கடத்தல் மற்றும் துஷ்பிரயோகத்திற்கு ஆளானதாக குற்றச்சாட்டியிருந்தார். தனக்கு 18 வயது இருக்கும் போது, இளவரசர் ஆண்ட்ரூவுடன் இரவை கழிக்க ஜெஃப்ரி கட்டாயப்படுத்தியதாகவும், முதல் முறையாக 2001ம் ஆண்டு ஆண்ட்ரூ தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் குற்றச்சாட்டினார்.
இதையும் படிங்க: அடுத்த ஆட்டம் ஆரம்பம்... நாளை வங்கக்கடலில் உருவாகிறது புதிய அரக்கன்... வெளியானது முக்கிய அலர்ட்...!
இரண்டாவது முறையாக நியூயார்க்கில் உள்ள எப்ஸ்டீனின் மாளிகையில் இளவரசர் ஆண்ட்ரூ தன்னுடன் பாலியல் ரீதியாக உறவு கொண்டதாகவும், அமெரிக்க விர்ஜின் தீவுகளில் உள்ள எப்ஸ்டீனின் தனியார் தீவான லிட்டில் செயிண்ட் ஜேம்ஸில் டியூக் மூன்றாவது முறையாக தன்னை சீரழித்ததாகவும் வர்ஜீனியா கியூப்ரே தெரிவித்திருந்தார்.
தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் இளவரசர் ஆண்ட்ரூ தொடர்ந்து மறுத்து வந்தார். இதனிடையே, இளவரசர் ஆண்ட்ரூ 2019ம் ஆண்டில் அப்போது ராபர்ட்ஸ் என்று அழைக்கப்பட்ட வர்ஜீனியா கியூஃப்ரே இடுப்பின் மீது கைப்போட்டபடி நிற்க, பின்னால் மேக்ஸ்வெல்லின் மனைவி இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலானது. ஆனால் இதற்கு விளக்கமளிக்க ஆண்ட்ரூ மறுத்துவிட்டார்.
ஆகஸ்ட் 2021ம் தேதி நியூயார்க்கில் ஒரு சிவில் வழக்கைத் தாக்கல் செய்த வர்ஜீனியா கியூஃப்ரே, 2025 ஏப்ரல் மாதம் தற்கொலை செய்து கொண்டார்.
ஒரு பிரிட்டிஷ் இளவரசர் அல்லது இளவரசி அந்தப் பட்டத்தை பறிப்பது கிட்டத்தட்ட முன்னோடியில்லாதது. இது கடைசியாக 1919 ஆம் ஆண்டு நடந்தது, இங்கிலாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் எர்னஸ்ட் அகஸ்டஸ், முதலாம் உலகப் போரின் போது ஜெர்மனியுடன் இணைந்து செயல்பட்டதற்காக தனது பட்டத்தை இழந்தது குறிப்பிடத்தக்கது. 
 
இதையும் படிங்க: “இபிஎஸ் சொல்வது எல்லாமே பொய்” - புள்ளி விவரத்தோடு பொளந்து கட்டிய அமைச்சர் சக்கரபாணி...!
 by
 by
                                    