லண்டனில் முதல்வர் வணங்கிய திருவள்ளுவர் நெற்றியில் விபூதி! வைரலாகும் புகைப்படம்...
லண்டனில் முதல்வர் ஸ்டாலின் வணங்கிய திருவள்ளுவர் நெற்றியில் விபூதி இருந்ததாக வெளியான புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தமிழ் இலக்கியத்தின் அமுதக் கோலாக திருக்குறள் இயற்றிய தெய்வப் புலவர் திருவள்ளுவர், தமிழர்களின் கலாச்சார மற்றும் அறநெறி மிகுபவர். அவரது வாழ்க்கை, காலம், மதம் என அனைத்தும் புராணங்களும் அனுமானங்களும் நிறைந்தவை. ஆனால், அவரது உருவப்படம் மற்றும் உடையைச் சுற்றிய, குறிப்பாக காவி உடையைத் தொடர்ந்து எழும் சர்ச்சைகள், தமிழக அரசியலின் ஒரு பகுதியாக மாறியுள்ளன. இது வெறும் உருவப்படப் பிரச்சினையல்ல; அது மத அடையாளம், சாதி, திராவிட இயக்கம், இந்துத்துவா என அனைத்தையும் தொடும் ஆழமான விவாதம்.
தொழில் முதலீடுகளை தமிழ்நாட்டுக்கு இருப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு ஒன்பது நாட்கள் சுற்றுப்பயணம் சென்றார். தனது பயணத்தின் ஒரு பகுதியாக லண்டனில் உள்ள கீழைத்தேயவியல் மற்றும் ஆப்பிரிக்கவியல் பல்கலைக் கழகத்திற்கு சென்று அங்குள்ள திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
இந்தநிலையில், அ.தி.மு.க. வழக்கறிஞர் அணி செயலாளரும், எம்.பி.யுமான ஐ.எஸ்.இன்பதுரை, மு.க.ஸ்டாலினின் சித்தாந்த தடுமாற்றம் என்ற தலைப்பில், நெற்றியில் விபூதி வைக்கப்பட்டு இருக்கும் திருவள்ளுவரை முதலமைச்சர் ஸ்டாலின் கும்பிடுவது போன்ற படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: சிலிண்டருக்கு ரூ.100 மானியம்! சொன்னிங்களே செஞ்சீங்களா ஸ்டாலின்... நயினார் சரமாரி கேள்வி
இதுதொடர்பாக தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், விபூதியுடன் திருவள்ளுவர் இருக்கும் படம் எடிடிங்க் செய்யப்பட்ட படம் என்று தெரிவித்து உள்ளது. மேலும், நெற்றியில் விபூதி இல்லாமல் உள்ள திருவள்ளுவர் படத்தையும் வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: பத்திரப்பதிவுத் துறையில் லஞ்சமா? எதையாவது உளறாதீங்க இபிஎஸ்! அமைச்சர் மூர்த்தி பதிலடி..!