வந்தாச்சு எல்பிஜி ஏடிஎம்... இனி 3 நிமிடங்களில் கேஸ் சிலிண்டர் கிடைக்கும்... எங்கு தெரியுமா?
நள்ளிரவில் கூட அவசரத் தேவைக்கு சிலிண்டரைப் பெறும் இந்த 'ஸ்மார்ட்' அம்சம், தற்போது நாடு முழுவதும் ஒரு பேசுபொருளாக மாறியுள்ளது.
பணம் மட்டும் இல்லீங்க இனி ஏடிஎம்மில் எரிவாயும் கிடைக்கும். ஆம், பாரத் பெட்ரோலியம் (BPCL) நிறுவனம் நாட்டிலேயே முதல் முறயாக 'எல்பிஜி ஏடிஎம்'-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இனி கேஸ் தீர்ந்துவிடுமோ என்ற கவலையின்றி, நள்ளிரவில் கூட அவசரத் தேவைக்கு சிலிண்டரைப் பெறும் இந்த 'ஸ்மார்ட்' அம்சம், தற்போது நாடு முழுவதும் ஒரு பேசுபொருளாக மாறியுள்ளது.
தலைநகர் டெல்லியில் உள்ள குருகிராமில் எரிவாயு சிலிண்டர்களை வழங்கும் நாட்டின் முதல் ஸ்மார்ட் விற்பனை இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பாரத் பெட்ரோலியம் (BPCL) நிறுவனத்தின் முன்னோடித் திட்டமாக இந்த 'இன்ஸ்டா எல்பிஜி' ஏடிஎம், சோனாவில் உள்ள சென்ட்ரல் பார்க் ஃப்ளவர் வேலியில் நிறுவப்பட்டுள்ளது. இந்த ஏடிஎம் மூலமாக பயனர்கள் எந்த டென்ஷனும் இல்லாமல் தங்களுக்கு வசதியான நேரத்தில் 2-3 நிமிடத்திற்குளாகவே கேஸ் சிலிண்டர்களை பெற முடியும்.
இந்த ஏடிஎம் மூலம் வழங்கப்படும் சிலிண்டர்கள் சாதாரண இரும்பு சிலிண்டர்கள் போன்றவையல்ல. இவை ஃபைபரால் செய்யப்பட்ட சிறப்பு சிலிண்டர்கள். ஒரு சாதாரண 14 கிலோ கேஸ் சிலிண்டர் மொத்தம் 31 கிலோ எடையிருக்கும் என்றால், இந்த ஃபைபர் சிலிண்டர் வெறும் 15 கிலோ மட்டுமே எடையிருக்கும். இதனால் இதனை வீட்டிற்கு எடுத்துச் செல்வது எளிது. இந்த கேஸ் சிலிண்டர்களை கண்ணால் உற்றுப்பார்த்தே எவ்வளவு சிலிண்டர் இருக்கிறது என நீங்கள் கண்டுபிடித்துவிடலாம். இது துருப்பிடிக்காது, தூசி படியாது என்பதால் சாதாரண கேஸ் சிலிண்டர்களை விட பாதுகாப்பானது
இதையும் படிங்க: கேஸ் சிலிண்டர் ரீஃபில் புக்கிங்கில் சிக்கல்..!! வொர்க் ஆகாத நம்பர்..!! ஏஜென்சிகளுக்கு படையெடுக்கும் மக்கள்..!!
இந்த ஏடிஎம் மூலமாக சிலிண்டர் எடுப்பதும் எளிதானது, பயனர்கள் தங்களோட செல்போன் எண்ணை பதிவிட்டதும், ஒரு ஓடிபி வரும். அதனை ஏடிஎமிற்குள் பதிவிட்டு உள்நுழைய வேண்டும். அதன் பின்னர் காலி சிலிண்டரில் உள்ள க்யூஆர் கோர்ட்டை இயந்திரத்தில் ஸ்கேன் செய்ய வேண்டும். அதன் பின்னர் யுபிஐ அல்லது டெபிட் கார்டு மூலமாக பணம் செலுத்த வேண்டும். பணம் செலுத்தப்பட்டவுடன் முழுவதுமாக நிரம்பிய ஃபைபர் கேஸ் சிலிண்டர் வெளியே அனுப்பிவைக்கப்படும். இதன் மூலமாக இனி 24 மணின் நேரமும் கேஸ் சிலிண்டர்களை பயனாளர்களால் பெற்றுக்கொள்ள முடியும்.
இதையும் படிங்க: தொடரும் எரிவாயு தட்டுப்பாடு.. 2வது நாளாக முடங்கிய ஆட்டோக்கள்.. தவிக்கும் சென்னை மக்கள்..!!