மடகாஸ்கரில் வெடித்த Gen Z போராட்டம்..!! கொந்தளிப்பில் இளைஞர்கள்.. ஓட்டம் பிடித்த அதிபர்..!!
மடகாஸ்கரில் நடந்து வரும் Gen Z போராட்டம் தீவிரமடைந்ததால் அதிபர் Andry Rajoelina நாட்டை விட்டு வெளியேறினார்.
மடகாஸ்கரின் தலைநகர் அண்டனானரிவோவில் சில வாரங்களாக நடந்து வரும் ஜென் Z இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்ததால், அதிபர் ஆண்ட்ரி ரஜோஎலினா தனது உயிருக்கு ஆபத்தம் உள்ளதாகக் கூறி நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். இந்தப் போராட்டம், மின்சாரம் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை போன்ற அடிப்படை சிக்கல்களிலிருந்து தொடங்கி, ஊழல், வறுமை மற்றும் ஆட்சியின் தவறுகளுக்கு எதிரான பெரும் கோபமாக மாறியுள்ளது.
ஐ.நா. அறிக்கையின்படி, போராட்டத்தில் 22 பேர் கொல்லப்பட்டு, 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கடந்த செப்டம்பர் 25ம் தேதி தொடங்கிய இந்த போராட்டத்தில் இளைஞர்கள், கருப்பு உடைகளில் தெருக்களில் இறங்கி, "ரஜோஎலினா வெளியேறு" என்ற கோஷங்களை எழுப்பினர். இந்த இயக்கம், நேபால் மற்றும் இலங்கையில் ஜென் Z போராட்டங்களால் ஊக்குவிக்கப்பட்டது. மடகாஸ்கரின் மக்கள்தொகை 3 கோடியில் உள்ளதில், சராசரி வயது 20க்கும் குறைவாகும். உலக வங்கியின்படி, 75% மக்கள் வறுமையில் வாழ்கின்றனர். 1960 சுதந்திரத்திலிருந்து GDP per capita 45% சரிந்துள்ளது. போராட்டக்காரர்கள், "இளைஞர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறோம்" என்று கூறுகின்றனர்.
இதையும் படிங்க: சீக்கிரம் போரை முடிங்க!! ரஷ்யாவுக்கு வார்னிங்! உக்ரைனுக்கு அமெரிக்கா கொடுக்கும் ராட்சஷன்!
மேலும் கடந்த சனிக்கிழமை, அதிபரின் ஆட்சிக்கு உதவியாக இருந்த எலிட் CAPSAT ராணுவப் பிரிவு போராட்டக்காரர்களுடன் இணைந்தது. இது 2009 கூட்டு அதிகாரத்துவத்தில் ரஜோஎலினாவை அதிகாரத்திற்கு கொண்டுவந்த அதே பிரிவாகும். ராணுவ வீரர்கள், "நாங்கள் போராட்டக்காரர்களை சுட மாட்டோம்" என்று அறிவித்து, புதிய ராணுவத் தலைவரை நியமித்தனர். இதனால், ரஜோஎலினா "இது கூட்டு அதிகார முயற்சி" என்று எச்சரித்தார். அதுமட்டுமின்றி எதிர்க்கட்சிகள், வர்த்தக சங்கங்கள் என பலரும் ஆதரவு அளித்துள்ளதால், வெடித்த போராட்டங்களால் அந்நாடு ஸ்தம்பித்துள்ளது.
இந்நிலையில் அதிபர் ரஜோஎலினா பிரெஞ்சு ராணுவ விமானத்தில் நாட்டை விட்டு வெளியேறினார். ஹெலிகாப்டரில் Sainte Marie விமான நிலையத்திற்கு சென்ற அவர், பிரெஞ்சு Army Casa விமானத்தில் துபாய் சென்றார். ரஜோஎலினா ஃபேஸ்புக் வீடியோவில், "என்னை கொல்ல முயன்றனர். தனது உயிரை பாதுகாத்துக்கொள்ள சென்றதாக கூறியுள்ளார். அவர் ராஜினாமா செய்யவில்லை, ஆனால் தேசிய சபையை கலைத்தார். ரஜோஎலினா, 2009ல் போராட்டங்களால் அதிகாரத்தைப் பெற்றவர். இப்போது, ஜென் Z இளைஞர்கள் மீண்டும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். நாட்டின் எதிர்காலம், புதிய தேர்தல்களையும் உரையாடலையும் நோக்கி செல்கிறது.
இதையும் படிங்க: முடிவுக்கு வருமா வரி வர்த்தக போர்! இந்திய குழு அமெரிக்கா பயணம்!