கட்சி பெயரை அறிவித்த மறுநாளே இப்படியா? - மல்லை சத்யாவிற்கு பகிரங்க மிரட்டல்...!
மல்லை சத்யா தொடங்கியுள்ள புதிய கட்சியின் பெயருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நெல்லையைச் சேர்ந்த கேபி சரவணன் என்பவர் 2024ஆம் ஆண்டு முதல் திராவிட வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் அமைப்பை நடத்தி வருவதாகவும் அதே பெயரை மல்லை சத்யா பயன்படுத்த கூடாது என்றும் தெரிவித்துள்ளார். மீறி பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து கே.பி. சரவணன் அறித்துள்ள பேட்டியில், கடந்த 2024 மே 1ஆம் தேதி திராவிட வெற்றி கழகம் என்ற இயக்கத்தை பெரியார் மண்ணான ஈரோட்டில் வைத்து தொடங்கினோம். இப்போது மல்லை சத்யா திராவிட வெற்றி கழகம் என்கிற பெயரை பயன்படுத்தி புதிய கட்சி தொடங்கியிருப்பது எங்களுக்கெல்லாம் உண்மையிலேயே மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. எங்களுடைய சமூக ஊடகங்களில் கூட மல்லை சத்யா இருக்கிறார்.அப்படி இருந்தும், ஒரு 15 பேர் கொண்ட குழுவை ஏற்படுத்தி, புதிய அரசியல் இயக்க தொடங்கிய போது, எங்களுடைய திராவிட வெற்றிக் கழகத்தின் பெயரை ஒரு எழுத்தை கூட முன்ன பின்ன சேர்க்காமல் தொடங்க வேண்டிய அவசியம் என்ன?. இதை மீறி வந்து அந்த பெயரை வந்து பயன்படுத்துவதை நிறுத்தாவிட்டால், சட்ட
வல்லுனர்களோடு கலந்து ஆலோசித்து அவர் மீது சட்டபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எனத் தெரிவித்துள்ளார்.
மதிமுகவில் துணை பொதுச்செயலாளராக இருந்த மல்லை சத்யா துரை வைகோ மற்றும் வைகோவுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதை அடுத்து புதிய கட்சியை தொடங்க முடிவு செய்த மல்லை சத்யா கடந்த மாதம் கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார்.
இதையும் படிங்க: இதெல்லாம் தமிழ்நாட்டுக்கு பேராபத்து... ஆதங்கத்தை வெளிப்படுத்திய வைகோ...!
இந்நிலையில் நேற்று சென்னை அடையாரில் உள்ள முத்தமிழ் பேரவையில் புதிய கட்சியின் தொடக்க விழா நடைபெற்றது. அதில் திராவிட வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கப்படுவதாக மல்லை சத்யா அறிவித்தார்.
இதையும் படிங்க: சகட்டுமேனிக்கு பேசிய விஜய்... என்ன ஒரு பித்தலாட்டம்! வைகோ காட்டம்...!