×
 

ஈராக் ஷாப்பிங் மாலில் கொடூர தீ விபத்து... பலி எண்ணிக்கை 60 ஆக உயர்வு...!

ஈரானில்  வணிக வளாகத்தில் தற்செயலாக பரவிய தீ கட்டிடம் முழுவதும் மளமளவென பரவியதில் சுமார் 50 பேர் இறந்ததாக நம்பப்படுகிறது.

கிழக்கு ஈராக்கில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 50 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில் பெரும்பாலோர் குழந்தைகள் என்று நம்பப்படுகிறது. கிழக்கு ஈராக்கின் அல்-குட் நகரில் உள்ள ஒரு ஹைப்பர் மார்க்கெட்டில் இரவு நேரத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அல்-குட்டில் உள்ள ஐந்து மாடி கட்டிடம் ஒன்று இரவு நேரத்தில் தீப்பிடித்துள்ளது. ஆரம்பத்தில் லேசாக பற்ற ஆரம்பித்த தீ ஒட்டுமொத்த மால் முழுவதும் மளமளவென பரவி கொளுந்துவிட்டு எரிந்துள்ளது. 

இந்த விபத்தில் மாலுக்குள் இருந்த   சுமார் 50 பேர் இறந்துவிட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின. தற்போது மாலில் இருந்து தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட சிலரும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும், விபத்தில் இறந்தவர்களில் பெரும்பாலோனோர் குழந்தைகள் என்ற தகவல் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்து தொடர்பான காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இந்த வீடியோக்களில், தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதைக் காணலாம்.

இதையும் படிங்க: திருவள்ளூர் அடுத்து திருப்பதி.. நின்றிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் பற்றி எரிந்த தீ..!!

விபத்து குறித்து அறிந்த அதிகாரிகள், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணையின் விவரங்களை 48 மணி நேரத்திற்குள் வெளியிடுவதாக உள்ளூர் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மறுபுறம், விபத்தில் சிக்கிய கட்டிடத்தின் உரிமையாளர் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

MAJOR BREAKING | 60 killed in a massive fire at Iraq shopping mall in the city of Kut. Casualties include women and children.

Initial probe findings to be announced in the next 48 hours.

🎥: Videos circulating on social media. pic.twitter.com/tB4uyEDUpB

— Asawari Jindal (@AsawariJindal15) July 17, 2025

இதையும் படிங்க: ரயில் பயணிகளுக்கான அறிவிப்பு..!! சென்ட்ரலில் இருந்த இந்த 3 ரயில்கள் செல்லாது..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share