×
 

நெஞ்சை பதற வைக்கும் சோகம்... நடுக்கடலில் படகு கவிழ்ந்து கோர விபத்து... 70 பேரின் நிலை என்ன?

ஈஸ்டர் வார இறுதியில் நிகழ்ந்த ஒரு துயரச் சம்பவத்தில், 100க்கும் மேற்பட்டோரை ஏற்றிச் சென்ற அகதிகள் படகு ஒன்று லிபியா கடற்கரையில் கவிழ்ந்தது.

100க்கும் மேற்பட்டோரை ஏற்றிச் சென்ற அகதிகள் படகு லிபியக் கடற்கரைக்கு அப்பால் கவிழ்ந்ததில், 70க்கும் மேற்பட்டோர் காணாமல் போயினர், தற்போது வரை உயிரிழந்த இருவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. 32 பேர் மட்டுமே உயிர் தப்பியுள்ளனர். அபாயகரமான மத்திய தரைக்கடலில் நடந்த இந்த சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது. 

மெடிட்டரேனியா சேவிங் ஹியூமன்ஸ் மற்றும் சீ-வாட்ச் ஆகிய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஞாயிற்றுக்கிழமை சமூக ஊடகங்களில் வெளியிட்ட தகவல்களை அடுத்து இந்த கோர சம்பவம் உலகிற்கு அம்பலமாகியுள்ளது. இந்த விபத்தில் 32 பேர் மட்டுமே உயிர் தப்பியதாகவும், 70க்கும் மேற்பட்டோர் இன்னும் காணாமல் போனதாகவும் இரு குழுக்களும் தெரிவித்தன. 

100க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோரை ஏற்றிக் கொண்டு பயணித்த படகு நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. படகு கவிழ்ந்த பிறகு மீட்புப் பணிகள் தொடங்கின. இத்தாலிய கடலோரக் காவல்படையின் செய்தித் தொடர்பாளரான ராபர்டோ டி'அரிகோ, ஒரு இத்தாலிய வர்த்தகக் கப்பலும் ஒரு லைபீரிய வர்த்தகக் கப்பலும்  மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.  மீட்கப்பட்ட நபர்கள் பின்னர் லம்பேடுசாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இது வட ஆப்பிரிக்காவிலிருந்து மத்தியதரைக் கடலைக் கடக்கும் புலம்பெயர்ந்தோருக்கான முதல் நுழைவாயிலாக அடிக்கடி செயல்படும் ஒரு சிறிய இத்தாலியத் தீவாகும்.

இதையும் படிங்க: எங்க அண்ணனுக்காக... விஜய் சொன்ன ஒற்றை வார்த்தை..!! தமிழ்நாட்டுக்கு படையெடுக்கும் NRI-க்கள்..!!

வெள்ளிக்கிழமை இரவுக்கும் சனிக்கிழமை காலைக்கும் இடையில் லிபியாவின் தஜூரா துறைமுகத்திலிருந்து புறப்பட்ட ஒரு சிறிய படகில் 100க்கும் மேற்பட்டோர் இருந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. உயரமான அலைகளுடன் வானிலை மிகவும் மோசமாக இருந்ததாக உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்தனர். பயணத்தைத் தொடங்கிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, லிபிய கடல் எல்லைக்குள் இருந்தபோதே படகில் நீர் கசியத் தொடங்கியதாகவும் உயிர் பிழைத்த பயணிகள் தெரிவித்துள்ளனர். 
 

இதையும் படிங்க: சென்னையின் 22 தொகுதிகளிலும் திமுக தான்... அமைச்சர் மா. சு. உறுதி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share