அதெல்லாம் அரசியல் சர்வீஸ் இல்லாத கட்சி... தவெகவை தவிடு பொடியாக்கிய துரைமுருகன்...!
த.வெ.க அரசியலில் சர்வீஸ் இல்லாத கட்சி த.வெ.கவுக்கு வேலூரில்அமைச்சர் துரைமுருகன் பதிலடி
வேலூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை பார்வையிட்ட அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அதிமுக ஒற்றுமையாக தான் இருப்பதாகவும் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவர் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர் அவர் எங்களுக்காகவா பேசுவார் அவர் அவருக்காக தான் பேசுவார்.
பழிவாங்கும் நோக்கோட திமுக செயல்படுவதாக த.வெ.க பொதுச் செயலாளர் புஸ்ஸி.ஆனந்தன் கூறியுள்ளார் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது அவர்கள் அரசியலில் சர்வீஸ் இல்லை.
தமிழகத்தில் நிரந்தர எதிரி திமுக தான் என கூறி வருகிறது என செய்தியாளர்கள் கேட்டதற்கு, இதிலிருந்தே தெரிகிறது தவெக எந்த அளவுக்கு அரசியல் அனுபவம் உள்ளது எனக்கூறினார்.
இதையும் படிங்க: “ஷப்பா இப்பவே கண்ண கட்டுதே”... சுற்றுபயணத்தில் விஜய்க்கு வந்த புது சிக்கல்.... தவெக நிர்வாகிகளால் தலைவலி...!
அன்புமணி ராமதாஸ் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் உங்களுடைய கருத்து என்ன என்று கேட்டதற்கு ?, அவர்கள் வீட்டுக்குள் நடக்கிற விஷயம் நமக்கு எதுக்கு என்று கூறினார்.
நந்தன் கால்வாய் திட்டத்திற்கு வேண்டிய பணமெல்லாம் ஒதுக்கியாச்சு விரைவில் துவக்க விழா செய்வோம். சிறப்பு வாக்காளர் திருத்தம் தமிழகத்திலும் நடைபெற உள்ளது குறித்து கேட்டதற்கு,
தமிழகம் பிகார் அல்ல. தமிழகம் விழிப்புணர்வு பெற்ற நாடு. அங்கு உள்ள ஆட்சி இங்கு அல்ல, இங்கு உள்ள ஆட்சி தளபதி ஆட்சி அந்த பம்மாத்து எல்லாம் தமிழகத்திலும், தளபதியிடமும் செல்லாது என கூறினார்.
திமுக சிதறிவிடும் என எடப்பாடி பேசியிருந்தது குறித்து கேட்டதற்கு, போகிற போக்கில் எதாவது பேச வேண்டும் என்பதற்காக பேசுகிறார் என்றார். தற்பொழுது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டு 1500, 2000 கோடி என வழங்கி வருகிறார்.தமிழகத்திற்கு அதைப்போல நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதா என செய்தியாளர்கள் கேட்டதற்கு?, தமிழகத்திற்கு கெட்ட பெயர் வர வேண்டும் என பாரதப் பிரதமர் நினைத்தால் அது நல்லதல்ல. அவர் அப்படித்தான் நினைப்பார் போல தான் தெரிகிறது எனக்கூறினார்.
இதையும் படிங்க: விஜய்க்கு 23 நிபந்தனைகளை விதித்த திருச்சி காவல்துறை... என்னென்ன தெரியுமா?