திமுக தீய சக்தி, தவெக தூய சக்தியா? - விஜயை வெறுத்து வாங்கிய அமைச்சர் ரகுபதி...!
நாங்கள் தீய சக்தி இல்லை நீங்கள் தான் தீய சக்தி என தமிழக வெற்றி கழக தலைவர் விஜயை சாடி தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கே. செட்டிபட்டியில் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி பேசகையில்: இந்தியாவிலேயே இந்த மாநிலத்தில் இல்லாத அளவு தமிழ்நாடு ஒரு சிறப்பான முன்னேற்றத்தை கண்டிருக்கிறது. அதற்கு எடுத்துக்காட்டு இங்கே திரளாக மகளிர் சகோதரிகள் வந்திருப்பதை ஆகும்.
நேற்று ஒருவர் தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பெண்களைப் பார்த்து கேட்டிருக்கிறார். பெண்கள் அதிகமாக கூடியிருந்த இடத்திலே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா என்று கேட்டார். பாதுகாப்பு இல்லை என்றால் அந்தப் பெண்கள் அங்கே வந்திருக்க முடியுமா என்று பாவம் அவர் யோசிக்க மறந்து விட்டார்.
அப்படிப்பட்ட தலைவர்கள் இருக்கின்ற இந்த மண்ணில் தான் துணிச்சலோடு எதையும் எடுத்துச் சொல்கிற ஆற்றல் மிக்க முதலமைச்சராக தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுகிறார். நாங்கள் செய்திருக்கிற திட்டங்களை சொல்லிவிட்டு இதையெல்லாம் வேறு எந்த மாநிலத்திலேயாவது உள்ளதா தமிழ்நாட்டில் தானே இருக்கிறது என்று கேட்டிருந்தால் தமிழ்நாட்டில் நடுநிலையுடன் தலைவர்கள் இருக்கிறார்கள் என்று மக்கள் எண்ணி பார்த்து இருப்பார்கள். ஆனால் அவர்களை பொறுத்தவரை வெறி பிடித்தவர்கள் ஏனென்றால் அவர்களைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை அவர்களுக்கு ஆட்சி அடைய வேண்டும் என்பதே அவர்களின் குறிக்கோள் அதை அடைய திராவிட மாடல் ஆட்சி எந்த காலத்திலும் அவர்களை விடாது என்று அவர்களுக்குத் தெரியும்.
இதையும் படிங்க: “மோடி, அமித் ஷா படையெடுத்து வந்தாலும் அது மட்டும் நடக்காது...” - பாஜகவிற்கு அமைச்சர் ரகுபதி பகிரங்க சவால்...!
தேர்தல் நேரத்தில் நாங்கள் 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை கொடுத்தும் அதில் 90% நிறைவேற்றி விட்டோம் எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சியை இந்தியா முழுவதும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம் ஆனால் இதை தமிழ்நாட்டிலேயே தடுத்து நிறுத்தி விடலாமா என்று தீய சக்திகள் நினைக்கின்றன, அந்த தீய சக்திகள் தங்களை தூய சக்தி என்று சொல்வது மிகப்பெரிய வேடிக்கை . இன்றைக்கு தமிழ்நாட்டின் தூய சக்தியான இயக்கம் இருக்கிறது என்று சொன்னால் அது திமுக கூட்டணியும் தமிழ்நாடு முதலமைச்சரும் தான். தீய சக்தி என்று சொல்கிறவர்கள் தாங்கள் தூய சக்தியா என்று ஒரு முறை நினைத்துப் பார்த்துவிட்டு சொல்ல வேண்டும்
தமிழ்நாட்டை இன்று முன்மாதிரியாக மாற்றிக் கொண்டிருக்கிறதை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் எங்களை தீய சக்தி என்கிறார்கள். அவர்கள் தூய சக்தி என்பதை நிரூபிக்க கடமைப்பட்டுள்ளார்கள் நாங்கள் தீய சக்தி இல்லை நீங்கள் தான் தீய சக்தி என்று பேசினார்.
இதையும் படிங்க: “ஆதவ் அர்ஜுனாவின் கிளி ஜோசியத்திற்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது...” - பாஜக, அதிமுக சீனியர் தலைகளையும் பொளந்தெடுத்த அமைச்சர் ரகுபதி...!