×
 

ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்புக்கரங்கள்! திட்டத்தை தொடங்கி வைக்கும் முதல்வர்

ஆதரவற்ற குழந்தைகளுக்கான அன்புக்கரங்கள் திட்டம் நாளை தொடங்கி வைக்கப்பட உள்ளது.

பெற்றோரை இழந்த குழந்தைகள், அவர்களின் உறவினர்களின் பொறுப்பில் வளர்க்கப்படும்போது, அவர்களின் அடிப்படைத் தேவைகளான கல்வி, உணவு, ஆரோக்கியம் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுவதைத் கண்டறியப்பட்டுள்ளது. இதனால், 2021-ல் ஆட்சிக்கு வந்த திமுக அரசு, இத்தகைய குழந்தைகளுக்கு நிதியுதவி அளிக்கும் அன்பு கரங்கள் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது, சமூக நலன் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படுகிறது.

திட்டத்தின் முக்கிய நோக்கம். இந்தக் குழந்தைகளை அன்பின் கரங்களால் தழுவி, அவர்களுக்கு சமமான வாழ்க்கை வாய்ப்புகளை அளிப்பதேயாகும். இதன் மூலம், அனாதை இல்லங்கள் அல்லது தனியார் நிறுவனங்களை மட்டும் சார்ந்திருக்காமல், அரசின் அன்பான தலையீடு மூலம் அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க முடியும்.இத்திட்டத்தின் முக்கிய அம்சங்களைப் பார்க்கும்போது, முதலாவதாக, நிதி உதவி அளிப்பது குறிப்பிடத்தக்கது. இரு பெற்றோரையும் இழந்த குழந்தைகளுக்கு, அவர்களைப் பராமரிக்கும் உறவினர்களுக்கு மாதாந்திர நிதி உதவி வழங்கப்படுகிறது.

இது, குழந்தைகளின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுகிறது. கல்வி உதவியாகவும் இது விரிவடைகிறது. பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதாந்திர கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இது அவர்களின் படிப்பைத் தொடர்ந்து செய்ய உதவுகிறது. இது, குழந்தைகளின் உடல், மன, கல்வி வளர்ச்சியை உறுதிப்படுத்துகிறது. திட்டத்தின் கீழ், சுகாதார சேவைகள், உணவுத் திட்டங்கள் மற்றும் உளவியல் ஆதரவு போன்றவையும் இணைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: திமுக வாக்குறுதி நிறைவேற்றலயா… விஜய் போட்ட பழி மக்கள்கிட்ட எடுபடுமா! பந்தாடிய மா.சு.

இதனால் குழந்தைகள் முழுமையான பாதுகாப்பைப் பெறுகின்றனர். இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் அன்பு கரங்கள் திட்டத்தை நாளை தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு மாதம் 2000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தின் மூலம் பெற்றோர் இல்லாத குழந்தைகளை பள்ளி, உயர் கல்விச் செலவை அரசே ஏற்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: பீர் அடிச்சுட்டு இளையராஜா போட்ட ஆட்டம் இருக்கே! பாராட்டு விழாவில் பங்கம் செய்த ரஜினிகாந்த்…

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share