×
 

போராட விட்டுட்டீங்களே! நீலி கண்ணீர் வடித்த பச்சை துரோகிகள் எங்கே? இபிஎஸ்- ஐ புரட்டி எடுத்த முதல்வர்...!

இரத்தத்தை வியர்வையாகச் சிந்தி உழவர்கள் உழைத்த உழைப்பு வீணாகக் கூடாது என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

டெல்டா மாவட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நெல்லின் ஈரப்பதத்தை அதிகரிக்க மறுத்திருக்கும் சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. விவசாயிகள் வயிற்றில் அடிப்பதாக கூறி மத்திய அரசை கண்டித்தும், அதற்கு துணை போகும் அதிமுகவை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனை சுட்டிக்காட்டி முதலமைச்சர் ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

டெல்டா விவசாயிகளின் கண்ணீர் துடைக்கத் துணை நிற்காமல், நீலிக்கண்ணீர் வடித்த பச்சைத் துரோகிகள் எங்கே என்ற கேள்வி எழுப்பினார். நீர்நிலைகள் நிறைந்து, உழவர்கள் கடும் உழைப்பைச் செலுத்தி நெடுவயல் நிறையக் கண்டபோது, கொள்முதல் நிலையங்களை அதிகரித்து தாங்கள் காத்திருந்ததாகவும், ஆனால், அதிகப்படியான மழைப்பொழிவால், நெல்மணிகள் ஈரமாயின என்றும் கூறினார்.

உடனே, சாகுபடிக் காலத்திற்கு முன்னதாகவே ஏன் அறுவடை செய்யவில்லை என்றெல்லாம் பச்சைத்துண்டு போட்டு பச்சைத் துரோகம் செய்தவரான அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிமேதாவித்தன அரசியல் செய்தார் என்று கூறினார்.நெல்லின் ஈரப்பதத்தை 22 விழுக்காடாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பிரதமர் மோடிக்கு தான் கடிதம் எழுதி இருந்ததையும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். அந்தக் கோரிக்கையை ஒன்றிய அரசு நிராகரித்துள்ளது எனக் இதோ, கழனியில் பாடுபட்ட உழவர்கள் களத்தில் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சீர்கெட்டு போன திருப்பூர் மாநகராட்சி... அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்... இபிஎஸ் அறிவிப்பு...!

போராடும் எங்களுக்குத் துணைநிற்க யாரிடம் அனுமதி பெற வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி காத்திருக்கிறார் என்ற கேள்வியை முன்வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், கூட்டணி அமைத்தால், அதனால் தமிழ்நாட்டுக்கு நன்மைகளைப் பெற்றுத்தர வேண்டும் என்றும் சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணி என்று எடப்பாடி பழனிச்சாமி நினைக்கிறார் எனவும் கேள்வி எழுப்பினார்.

மூன்று வேளாண் சட்டங்களை மண்டி போட்டு ஆதரித்த எடப்பாடி பழனிச்சாமி, ஒருமுறையாவது தலையைச் சற்று நிமிர்த்தி நமது உழவர்களின் கோரிக்கைகளைக் கேட்கச் சொல்லியாவது சொல்வாரா என்றும் உழவர்கள் நலன் காக்கத் தமிழ்நாடு ஒற்றுமையாகக் குரல் கொடுக்க வேண்டும் என்பதால்தான் இத்தனையும் கேட்பதாகவும் தெரிவித்தார். மேலும் இரத்தத்தை வியர்வையாகச் சிந்தி உழவர்கள் உழைத்த உழைப்பு வீணாகக் கூடாது என்றும் கூறினார்.

இதையும் படிங்க: இபிஎஸ் ஆட்சி அமைந்தால் மெட்ரோ வருமா? அப்படி என்ன காழ்ப்புணர்ச்சி... விளாசிய டிடிவி தினகரன்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share