வரலாற்றின் அத்தியாயம்... மாவீரன் பொல்லான் அரங்கத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்...!
ஈரோட்டில் மாவீரன் பொல்லான் அரங்கத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மாவீரன் பொல்லானின் வாழ்க்கை, 18-ஆம் நூற்றாண்டின் தமிழ்நாட்டின் போராட்ட வரலாற்றின் ஒரு முக்கிய அத்தியாயம். ஈரோடு மாவட்டத்தின் அரச்சலூர் அருகே உள்ள நல்லமங்கலம்பாளையம் கிராமத்தில் பிறந்த இவர், சிறு வயதிலிருந்தே வாள், வில், மற்போர் பயிற்சிகளில் ஆழ்ந்து, கம்பீரமான தோற்றத்துடன் ஒரு போர்வீரராக வளர்ந்தார். அவர் தீரன் சின்னமலையின் படைத்தளபதியாகவும், ஒற்றர் படையில் முக்கிய பங்காற்றியவராகவும் அறியப்படுகிறார். பிரிட்டிஷ் காலனிய ஆட்சியின் அநீதிகளுக்கு எதிராக, தீரன் சின்னமலையுடன் இணைந்து போரிட்ட பொல்லான், ஆங்கிலேயர்களின் ரகசியத் திட்டங்களை அறிந்து, அவற்றைத் தடுப்பதில் மிகுந்த திறனுடன் செயல்பட்டார். இவரது துணிச்சல், தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் ஒரு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியது. ஆனால், போராட்டத்தின் தீவிரமான கட்டத்தில், அறச்சலூரில் ஆங்கிலேயர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மாவீரன் பொல்லானுக்கு மணிமண்டபம் அமைக்கும் கோரிக்கை, கடந்த பல ஆண்டுகளாக 'மாவீரன் பொல்லான் வரலாறு மீட்புக் குழு'வினரால் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. 2020ஆம் ஆண்டு, திமுக எம்.பி. கனிமொழியைச் சந்தித்து, பொல்லானுக்கு மணிமண்டபம் அமைக்கக் கோரிய மனு வழங்கப்பட்டது.
இந்தக் கோரிக்கைகள், 2023ஆம் ஆண்டு தமிழ்நாட்டு முதல்வர் மு.க. ஸ்டாலினின் ஆணைக்குப் பிறகு உருவாக்கப்பட்டன. ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டத்தின் ஜெயராம்புரம் என்ற இடத்தில், இந்த அரங்கத்தின் அமைப்புப் பணிகள் தொடங்கின. 2023 பிப்ரவரியில், செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் இந்த இடத்தைப் பார்வையிட்டு, பணிகளைத் துரிதப்படுத்தினார்.
இதையும் படிங்க: விவசாயிகளுக்கு விரோதி ஸ்டாலின்… இப்படிப்பட்ட முதல்வரை பார்த்ததே இல்ல… விளாசிய இபிஎஸ்…!
மாவீரன் பொல்லான் அரங்கம், ரூபாய் 490 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. மாவீரன் பொல்லான் அரங்கத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். தொடர்ந்து மாவீரன் பள்ளானின் திருவுருவச் சிலையையும் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
இதையும் படிங்க: வேதனையா இருக்கு... தென்காசி பேருந்து விபத்து... மீட்புப் பணிகளை துரிதப்படுத்த முதல்வர் ஆணை...!