உண்மைய தான் சொல்றேன்! மாநில வருவாய் இல்லாத GST சீர்திருத்தம் கை கொடுக்காது.. முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்..!
மாநில வருவாய் நலன் இல்லாத ஜிஎஸ்டி சீர்திருத்தம் கை கொடுக்காது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
டெல்லியில் இன்று எட்டு மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் பங்கேற்புடன் நடைபெற்ற ஜிஎஸ்டி (பொருட்கள் மற்றும் சேவைகள் வரி) விகித பகுத்தறிவு கூட்டம், இந்தியாவின் வரி அமைப்பில் முக்கியமான மாற்றங்களை முன்மொழியும் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமைந்தது. இந்தக் கூட்டம், மத்திய அரசின் ஜிஎஸ்டி சீர்திருத்த முன்மொழிவுகளை ஆராய்ந்து, வரி அமைப்பை எளிமையாக்குவதற்கும், பொதுமக்கள், விவசாயிகள், நடுத்தர வர்க்கம் மற்றும் சிறு, குறு தொழில்களுக்கு பயனளிக்கும் வகையில் வரி விகிதங்களை மறுசீரமைப்பு செய்வதற்கும் முக்கியத்துவம் அளித்தது.
இந்தக் கூட்டத்தில், மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் இந்த முன்மொழிவுகளை ஆராய்ந்தனர், ஆனால் வருவாய் இழப்பு குறித்து சில மாநிலங்கள் கவலை தெரிவித்தன. குறிப்பாக, பஞ்சாப், கேரளா, மேற்கு வங்கம், மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்கள், வரி விகிதக் குறைப்பு மாநிலங்களின் வருவாயை பாதிக்கும் என்று எச்சரித்தன. இதற்கு மாற்றாக, மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான ஒரு பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
இந்த நிலையில், மாநில வருவாயைப் பாதுகாக்காமல், GST சீர்திருத்தங்கள் மக்களுக்கு சேவை செய்ய முடியாது என்று கூறினார். எதிர்க்கட்சி ஆளும் எட்டு மாநிலங்களின் மாண்புமிகு நிதி அமைச்சர்கள் டெல்லியில் கூடி மத்திய அரசின் முன்மொழியப்பட்ட GST விகித பகுத்தறிவு குறித்து ஆலோசித்து உள்ளதாகவும் தெரிவித்தார். சீர்திருத்தத்தின் நோக்கத்தை வரவேற்கும் அதே வேளையில், எந்தவொரு குறைப்பும் நலத்திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பைத் தக்கவைக்கும் மாநில வருவாயைக் குறைக்கக்கூடாது என்பதை தாங்கள் வலியுறுத்தியதாகவும் குறைந்த விகிதங்களின் நன்மைகள் நேரடியாக சாதாரண மக்களைச் சென்றடைய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வாக்குறுதி சாக்கடைக்கு போச்சு! மக்கள் குறை குப்பைக்கு போச்சு... திமுகவை விளாசிய அண்ணாமலை
வருவாய் நலன்களைப் பாதுகாக்கவும் நியாயமான விளைவுகளை உறுதி செய்யவும் அனைத்து மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் ஆதரவைக் கோரும் ஒருமித்த வரைவு உருவாக்கப்பட்டது மற்றும் GST கவுன்சிலின் முன் வைக்கப்படும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: சொன்னீங்களே செஞ்சீங்களா? திமுகவை பந்தாடிய நயினார் நாகேந்திரன்...