×
 

மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்ச்சி... அறிவில் சிறந்தவர்கள் தமிழர்கள்! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

தமிழுக்கு தீங்கிழைப்பவர்களின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது என முதலமைச்சர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவும் ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 8 ஆம் தேதி வரை ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு ஒரு வார அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணம், தமிழ்நாட்டின் தொழில் துறையை உலக அரங்கில் முன்னிலைப்படுத்துவதற்கும், ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைவதற்கும் முக்கியமான முயற்சியாக அமைந்தது.

இதற்கு முன்பு, ஸ்டாலின் துபாய், ஜப்பான், சிங்கப்பூர், ஸ்பெயின், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு மேற்கொண்ட பயணங்களில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்திருந்தார். இந்தப் பயணமும் அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டின் தொழில் மற்றும் கலாசார பிம்பத்தை உயர்த்துவதற்கு முக்கிய பங்காற்றியது.

இந்த நிலையில் லண்டனில் நடைபெற்ற தமிழ் கனவு நிகழ்ச்சியில் இங்கிலாந்து வாழ் தமிழர்கள் இடையே முதலமைச்சர் ஸ்டாலின் உரை நிகழ்த்தினார். அப்போது, உலகில் எங்கு சென்றாலும் தமிழர்கள் ஆகிய நாம் நமது மொழியையும் பண்பாட்டையும் விட மாட்டோம் என்றும் திராவிடத்தால் வாழ்கிறோம் என பெருமிதத்துடன் சொல்கிற தமிழர்களை தான் இங்கு பார்ப்பதாகவும் தெரிவித்தார். சுயமரியாதை, சமத்துவ எண்ணம், சமூக நீதிக் கோட்பாட்டை விடமாட்டோம் என்றும் தமிழுக்கு தீங்கு நினைப்பவர்கள் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது என்றும், தமிழ்நாட்டின் பெருமையை எடுத்து சொல்லும் தூதுவர்களாக இங்கிலாந்து வாழ்ந்த தமிழர்கள் இருப்பதாகவும் தெரிவித்தார். அறிவில் சிறந்தவர்கள் தமிழர்கள் என்பதை அயலக மண்ணில் நிரூபித்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.

இதையும் படிங்க: கொள்ளையடிக்க தெரிஞ்சா தான கரப்ஷன் பண்ண முடியும்! திமுக அரசை கடுமையாக விமர்சித்த எடப்பாடி

தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வருமாறு இங்கிலாந்து வாழ் தமிழர்களுக்கு அழைப்பு விடுத்த முதலமைச்சர் ஸ்டாலின், சிறந்த உள் கட்டமைப்பு, திறமையான இளைஞர்கள், அமைதியான சூழல் காரணமாக தமிழ்நாட்டில் முதலீடுகள் குவிந்து வருவதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல்... பாதுகாப்பு அச்சுறுத்தல் தான் திராவிட மாடலா? நயினார் கண்டனம்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share