தமிழ்நாடுதான் நம்பர் ஒன்.!! டப்பா என்ஜின் மாநிலங்களில் வளர்ச்சியை காட்ட முடியுமா? சவால் விட்ட முதல்வர்..!!
தமிழ்நாடு நம்பர் ஒன் மாநிலம் என மத்திய பாஜக அரசே கூறி இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் நடந்த கருத்தரங்கில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, தமிழ்நாட்டுக்கான எனது கனவு என்பது தனிப்பட்ட ஸ்டாலினின் கனவு அல்ல என்று தெரிவித்தார். தமிழ்நாட்டுக்கான எனது கனவு என்பது ஒட்டுமொத்த தமிழர்களின் எதிர்பார்ப்புகளை உள்ளடக்கியது தான் என்று கூறியுள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாடு பெரும் பாய்ச்சலை கண்டிருப்பதாகவும் பெருமிதம் கூறினார். தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கி இருப்பதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் திட்டங்களை ஐக்கிய நாடுகள் சபை வரை பாராட்டியுள்ளது என்றும் கூறியுள்ளார். தமிழகம் அனைத்து துறைகளிலும் ஆல்ரவுண்டராக வளர்ந்துள்ளது என்று கூறினார்.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு ஆதரவான நிலை இருப்பதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் எல்லோருக்குமான ஆட்சியை செய்து காட்டிருப்பதாகவும் தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சிக்கு ஆதரவான அலை வீசுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். திமுக ஆட்சியின் முத்திரை திட்டங்கள் அனைத்தும் மகளிர்காகவே உருவாக்கப்பட்ட இருப்பதாகவும் கூறினார். டபுள் எஞ்சின் எனக் கூறும் டப்பா என்ஜின் மாநிலங்களில் இப்படி ஒரு வளர்ச்சியை காட்ட முடியுமா என்று சவால் விட்டார்.
இதையும் படிங்க: எல்லா செக்டார்களிலும் கலக்குவோம்..! ALL ROUNDER திராவிட மாடல்... முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்...!!
தமிழகம் நம்பர் ஒன் மாநிலம் என மத்திய பாஜக அரசே கூறி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் நெருக்கடிகளை தாண்டி தமிழ்நாடு வளர்ந்திருப்பதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அனைவரின் வளர்ச்சியையும் நோக்கமாகக் கொண்டே திட்டங்கள் தீட்டப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டு பேசினார்.
இதையும் படிங்க: விசிகவிற்கு இரட்டை இலக்கத்தில் சீட்...! திமுகவுக்கு திருமா. ஹை டிமாண்ட்..!!