×
 

“இனி பாத்ரூம் போகக்கூட அமித் ஷாகிட்ட பர்மிஷன் கேட்பாரு...” - எடப்பாடி பழனிசாமியை பங்கமாய் கலாய்த்த சு.வெங்கடேசன்...!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பாத்ரூம் சென்றால் கூட அமிஷாவிடம் கேட்டுவிட்டு தான் செல்ல வேண்டிய சூழல் வந்துவிடுமோ? என எம்பி வெங்கடேசன் தெரிவித்துள்ளார். 

இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற 
அரசியல் விளக்கப் பொதுக்கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வெங்கடேசன் பேசுகையில் :  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நீங்கள் இனி பாத்ரூமுக்கு சென்றால் கூட அமித்ஷாவிடம் சென்று அனுமதி வாங்கிவிட்டு தான் செல்ல வேண்டிய சூழல் வந்து விடக்கூடாது என்ற அக்கறையில் தான் தமிழகத்தில் ஊடகங்கள் மாறி மாறி எழுதிக் கொண்டிருக்கிறது.

காசிக்கு போறேன்னு சொல்ற செங்கோட்டையின் அமிஷாவை சந்திக்கிறார். அதிமுக அலுவலகம் போறே என்று சொல்லிவிட்டு போன எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவை சந்திக்கிறார். ஏன் பொய் சொல்லி விட்டு போக வேண்டும் உண்மையை கூறிவிட்டு செல்லலாமே ஏனென்றால் நீங்கள் போற இடம் நல்ல இடம் இல்லை தெரிகிறதா?. நீங்க போற வேலை நேர்மை இல்லாத வேலை என தெரிகிறதா ?. உள்கட்சி பிரச்சனையில் ஏன் பாஜக தலையிட வேண்டும் ஏனென்றால் நாட்டில் பல்வேறு மாநிலங்களில் வளர்ந்த விதம் அதுதான், நாட்டில் எந்த கட்சிகளும் ஒரு கொள்கை இருக்கும் கொள்கைக்காக தொண்டன் இருப்பான். பாஜக அப்படியில்லை ஏற்கனவே வளர்ந்து இருக்கிற கட்சியை அளித்து உள்வாங்கி கொள்வதுதான் பாஜக.

இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களின் பாஜகவின் வரலாறு இதுதான்,அப்படி ஒரு நிலை நிலை அதிமுகவுக்கு வந்து விடக்கூடாது என்பது பலரும் கவலைப்பட்டோம். இன்றும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். தமிழகத்தின் ஒரு பெரிய கட்சி அளித்து அமித்ஷாவின் சொல்லை கேட்பது போல் ஒரு சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்திய ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய ஆபத்துகளில் இது ஒன்று.

இதையும் படிங்க: “இந்தா ஆரம்பிச்சிட்டாங்க இல்ல” - திமுக பாணியைக் கையில் எடுத்த அதிமுக... தொண்டர்களுக்கு ஆர்.பி. உதயக்குமார் அதிரடி உத்தரவு...!

ஜிஎஸ்டி வரி குறைப்பு என்பது பாஜக அரசின் மோடியின் தீபாவளி பரிசு மக்களுக்கு என கூறுகின்றனர். கடந்த எட்டு வருடங்களாக தீபாவளிக்கு கிடைக்க வேண்டிய பரிசை அபகரித்த புண்ணியவான்கள் யார்? இதை நாங்கள் கேட்க விரும்புகிறோம். எட்டு வருடங்களாக மக்களுக்கு சிரமங்களையும் கஷ்டங்களை கொடுத்து விட்டு இப்ப தீபாவளி பரிசு, ஜிஎஸ்டி வரியை உயர்த்தும்போது இது ஜிஎஸ்டி கவுன்சிலிங்கால் எடுத்த முடிவு எனக் கூறும் மோடியும் நிதி அமைச்சரும் தற்போது மோடியால்தான் ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது எனக் கூறுவது அரசியல் பித்தலாட்டம்.

இத்தனை ஆண்டு வரலாற்றில் இறைவனுக்கு ஏற்றக்கூடிய கற்பூரம் வரி போட்ட ஒரே ஒரு மனிதர் மோடி அவர் மட்டும்தான். ஏற்கனவே அமெரிக்க அதிபர் போட்டுள்ள வரியால் ஏற்றுமதி பாதிப்பு.இதில் அதிகம் பாதிக்கப்பட்டிருக்க மாநிலம் தமிழ்நாடு ஏனென்றால் இங்கு தான் அதிக அளவு பொருட்கள் உற்பத்தி செய்யப்படும் மாநிலமாக உள்ளது.

அமெரிக்கா விதித்த வரி விதிப்பால் இந்தியா எல்லா விதத்திலும் பாதிக்கிறது. ஆனால் பிரதமர் மோடி ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய் வாங்கி தயாரிக்கும் சுத்திகரிப்பு செய்யும் ரிலையன்ஸ் கம்பெனி பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக மட்டும் தான் கவலைப்படுகிறார். மக்களைப் பற்றி கவலைப்படவில்லை. சிறு, குறு தொழிலை பற்றி கவலைப்படவில்லை. 

டெல்லிக்கு அடிக்கடி சென்று அமித் ஷாவை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி கீழடி அகழாய்வு முடிவு அறிக்கை ஏன்? இதுவரை ஒன்றிய அரசு வெளியிடவில்லை என்று ஒரு முறையாவது பேசியது உண்டா? ஒரு கோரிக்கையாவது வைத்தது உண்டா? எனக்கு கேள்வி எழுப்பினார் .
 

இதையும் படிங்க: ரோபோ சங்கர் எப்படி வளர்ந்தாரு தெரியுமா? இபிஎஸ் உருக்கம்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share