×
 

அவசரத்தின் பின்னால் அருவருப்பான அரசியல்... உண்மை வெளிவரும்... சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு நயினார் வரவேற்பு...!

கரூர் சம்பவத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்றுள்ளார்.

கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இது தொடர்பாக தனிநபர் ஆணையத்தை தமிழக அரசு அமைப்பு உத்தரவிட்டது. மேலும் சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை விசாரணைக்காக அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சிறப்பு புலனாய்வு குழு உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக வெற்றிக்கழகம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு உட்பட கரூர் சம்பவம் தொடர்பாக தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளில் தீர்ப்பு வெளியானது.

கரூர் சம்பவம் தொடர்பான வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு 41 பேரைக் காவு வாங்கிய கரூர் துயரத்தின் பின்னணியை சிபிஐ தான் விசாரிக்க வேண்டுமென்ற தங்கள் வலுவான கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும் வகையில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதோடு, உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி திரு. அஜய் ரஸ்தோகி அவர்கள் தலைமையில் கண்காணிப்புப் குழுவையும் அமைத்துள்ள உச்சநீதிமன்றத்திற்கு நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பரபரப்பை கிளப்பும் கரூர் துயரச் சம்பவம்.. SIT-ஐ எதிர்க்கும் தவெக.. சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை..!!

கரூர் சம்பவத்தில் தங்கள் மீது எந்தவிதத் தவறும் இல்லை என்பதை நிறுவ, எதிர்தரப்பினரைக் குற்றவாளி கூண்டில் நிறுத்தி தங்கள் இஷ்டத்திற்குக் கட்டுக்கதைகளைப் புனைந்து வந்த திமுக அரசின் அவசரத்திற்குப் பின்னால் ஏதோவொரு அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது என்ற மக்களின் சந்தேகத்திற்குக் கூடிய விரைவில் விடை கிடைக்கப்போகிறது எனவும் தெரிவித்தார். தங்களின் அரசியல் காழ்ப்புணர்ச்சிகளுக்காக அப்பாவிப் பொதுமக்களைக் காவு வாங்கிய கயவர்கள் கருணையின்றி தண்டிக்கப்படுவார்கள் எனவும் கூறினார்.

இதையும் படிங்க: #BREAKING: கரூர் சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share