×
 

"விநாயகர் சிலையை அவமதித்த தவெகவினர்"..! அரெஸ்ட் பண்ணுங்க... நயினார் காட்டம்..!!

விநாயகர் சிலைகளை அவமதித்த தவெக கட்சியினரை கைது செய்ய நயினார் வலியுறுத்தினார்.

சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை முதல்வர் விஜய் தோற்றத்தில் வடிவமைத்துக் காட்சிப்படுத்தியிருப்பதை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

கோடிக்கணக்கான மக்களின் பக்திக்கும் வழிபாட்டுக்கும் உரிய இறை உருவத்தை, தனிநபர் துதிபாடுவதற்காகவும் அரசியல் விளம்பரத்திற்காகவும் இவ்வாறு உருமாற்றுவது மக்களின் ஆன்மிக உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும் செயல் என்று அவர் குறிப்பிட்டார்.

புனிதமான விழாவை அரசியல் சுயலாப மேடையாக்கி, இறை வழிபாட்டைத் தேர்தல் பிரச்சாரமாகத் தரம் தாழ்த்தும் தவெகவினரை முதல்வர் ஜோசப் விஜய் ஆரம்பத்திலேயே கண்டிக்காமல் மௌனம் காத்ததே இத்தகைய எல்லை மீறிய செயல்கள் தொடர்வதற்குக் காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.மக்களின் மத உணர்வுகளையும் வழிபாட்டு மரபுகளையும் சீர்குலைக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ள இத்தகைய சிலைகளை தவெக கட்சி உடனடியாக அகற்ற வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: ஆந்திராவை போல் தமிழகத்திலும்..! விநாயகர் சதுர்த்திக்கு இலவச மின்சார சேவை...! நயினார் வலியுறுத்தல்..!!

இறை உருவங்களைத் தங்களின் சுய விளம்பரங்களுக்குப் பயன்படுத்திய தவெக நிர்வாகிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுத்து அவர்களைக் கைது செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். விநாயகர் சிலையை அவமதித்த தவெகவினரைக் கைது செய்ய வேண்டும் என்பதே அவரது முக்கிய கோரிக்கையாக அமைந்தது.

இதையும் படிங்க: இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு... வெற்றிக்கு பாடுபடுவோம்..! நயினார் நாகேந்திரன் உறுதி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share